காதல்

இரு இதயங்களின் சங்கமத்தின்
ஒரு ஓசை காதல்
உணர்வுகளின் பகிர்வில்
உயிர்கள் சேரும் இடம் காதல்
நினைவுகளாய் நின்று
தித்திப்பாய் இனிப்பது காதல்
துயரங்கள் கடந்தும்
துணையாய் பயணிப்பது காதல்
பிரிவாே இணைவாே
கூட வருவது காதல்
இறவா வரம் பெற்ற
இதயத் துடிப்பு காதல்
காதல் செய்யும் காதலர்க்கும்
பிரிந்த காதலை நேசிக்கும்
பிரியமான நெஞ்சங்களுக்கும்
காதல் சாெல்ல காத்திருப்பாேர்க்கும்
காதலர் தின வாழ்த்துக்கள்
என்றென்றும் வாழ்க
காதல்

எழுதியவர் : அபி றாெஸ்னி (14-Feb-18, 11:11 am)
Tanglish : kaadhal
பார்வை : 107

மேலே