காதல் மண்ணில் வாழட்டும்

வண்டோடு மலரின் காதல்
வண்ணக் கிளிகளின் நேசம்
பசுவைக் கொஞ்சும் காளை
பருவப் புறாக்களின் முத்தம்
இவை ஒன்றிலொன்று இரண்டறக் கலக்கும்
வானம் பூமி நதி கடல் உள்ளவரை
இந்த மண்ணிலிருக்கும் மாறா நியதி

மனிதா ஏனடா நீஇன்னும்
சாதி வேற்றுமை மத பேதம்
பார்த்து இள உள்ளங்களின்
காதலில் தீயை மூட்டுகிறாய்

மனங்கள் இணைந்தால்
நமக்கேன் மறுதலிப்பு
அவை மகிழ்வாய் இருக்கட்டுமே
அன்பால் இணைந்தால்
நமக்கேன் பெருவெறுப்பு
அவை வாழ்வை ரசிக்கட்டுமே?

மனிதனில் உருவம் ஒன்று
உணர்வுகள் ஒன்று
அமைப்பு ஒன்று உடலில்
ஓடும் இரத்தமும் ஒன்று
இயல்பாய் இணையும்
இளம் ஜோடிகள் காதலில்
மட்டும் மனிதா ஏன் இந்த வேறுபாடு?

எத்தனை காலம் தான்
பூமியில் நம் வாழ்வு
இருக்கும் காலம் வரை
மண்ணில் மகிழ்வு பெருகட்டுமே!
காதல் மண்ணில் வாழட்டுமே அதில்
வரும் பிறழ்வுகள் யாவும் உன்னால் தீரட்டுமே
காதலர் தின வாழ்த்துக்கள் !

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (14-Feb-18, 2:19 pm)
பார்வை : 121

மேலே