உன் நினைவுகள்

கடந்த வருடத்தில் காதலர் தினம்
ஒரு நாள் மட்டும் ஏன் என்றேன்
இந்நாளில் ஏன் அந்த நாள் மட்டும்
எனதாக்கி கொள்ள கூடாது என்று ஏங்கினேன்!!

உனக்கு ஒரு பரிசளிக்க
மனம் ஏங்கியது - ஏனோ
நம் சூழ்நிலை தடுத்தது

என்னை நான் உணர்ந்தது
உன் உணர்வில் தான்
என் பெண்மை இளமையாகியதும்
உன் நினைவில் தான் !!

முதிர்ந்த காதலும் காதல் தானே
முழுமையானது என்று எதை சொல்லுவது

நீ அளிக்கும் அன்பினாலா இல்லை
உன் கஜ்ஜையில் நான் உறங்காமல்
உறங்குகிறேனே அதினாலா

இல்லை எதுவும் இல்லை
என்றும் என்றென்றும் என் நினைவில்
நீ நீந்துகிறாய் என்பதில் நான் முழுமையடைகிறேன்

நீயும் அடைவாய் உன் எண்ணங்களின் இனிமை உன்னை இறுக்கும் போது - என மனமார வாழ்த்துகிறேன்

என்னுள் நீ உன்னுள் நான் என்று
வாத்தைகளால் வருடவில்லை
உணர்வுகளை உண்மையாய் பரிமாறுகிறேன் உன் அன்பு
தோழியான காதலி

எழுதியவர் : (14-Feb-18, 12:54 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 114

மேலே