தமிழ் தான் எம் மொழி என் உறுப்பு அறுந்து போனாலும் கூறுவேன்

வங்கக் கடலிலே ஓர் நாடு இருக்கும்
அதுக்கு தமிழ்நாடு னு ஒரு பேரூருக்கும்
மூன்று கடல் சங்கமிக்கும் குமரிக்கும்
குழந்தை பருவத்தில் தமிழே தாயாக இருக்கும்
உலகின் பத்து கோடி பேருக்கு ஒரு மொழி இருக்கும்
தென்கோடி குமரியிலே தமிழின் பிறப்பு இருக்கும்

தமிழன் படைத்த முச்சங்கமெலாம்
சாணக்கிய தோட்டம் பூத்ததடா..!!!
தாய்மை படைத்த முத்தமிழும்
இயல் இசை நாடகம் ஏற்றதடா..!!!

என் தாத்தன் கொடியோ என் அப்பன் வழியோ
சேர்த்து கொண்டது என் தமிழ் குடியே
என் இளந்தாடிக்கு ஒரு இளமை இருக்கு
என் தமிழ் மீதே என் காதல் இருக்கு
வெற்பன் கொண்ட மழையாக
சிதைந்து சரிந்துடும் தூணாக அல்ல என்
தமிழ் மீது என் காதல்..!!!

துப்பாக்கி சண்டையில் என்னடா வீரம்???
புறநாநூற்றை புரட்டி பாரடா தமிழனின் வீரம்
காணொளியில் கண்ணாமூச்சி ஆடும் உனக்கு
என்ன தெரியும்???
தமிழனின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பற்றி....!

தமிழனின் முறுக்கு மீசைக்கு ஒரு திமிரு இருக்கும்
அதற்கு
முந்தானை என்ற ஒரு கயிறு இருக்கும்
இது புரியுமா உனக்கு
காற்றிலே கவி பாட குயில் இருக்கும்
குயில்பாட்டு பாடிட பாரதி தமிழே இருக்கும்
ஆற்றிலே ஆட்டம் ஆட அல்லி இருக்கும்
அணையா விளக்காக வள்ளலார் தரும சாலை இருக்கும்
பாரதியின் காட்சி பிழை கண்ணகியின் கற்பை சந்தேகிப்பதா??? அல்ல
கோவலனின் கொலையை நீதி ஆடுவதே...

செந்நெல்லை கருஞ்சேற்றில் எடுத்து
பசிக்கு கவி பசியாற வெண்மை இசை பாட
இயற்க்கை என்னும் பசுமை கொண்ட
என் இந்திய தேசத்திற்கு இனியும்
திருமந்திரம் சொல்ல திருநீர் எதற்கு???
திருத்தி மந்திரம் சொல்ல திரு நா....! போதாதா

பல்லி விழுந்த பானை சோறும் விஷம்
இல்லா ஜாதி கேட்கும் பள்ளியே கொடிய விஷம் மறவாதே..!!!
வானகத்து மேகத்தின் இடியை இசையாக்கி
மழைக்கு மரியாதை மலர்ந்திட செய்த வம்சமடா

என் சோழ பரம்பரைக்கு சோறு பஞ்சமா
என் சோழன் கரிகாலன் இருந்தால் கடலே
கல்லணை ஆகி இருக்குமே
என் சோழன் மனுநீதி இருந்தால்
இருளருக்கு சரியான நீதி இருக்குமே
மாண்ட பரம்பரையா நாங்க???
ஆண்ட பரம்பரை டா நாங்க...!!!

என்ற கர்ஜனையோடு நொடிப்பொழுதில் எழுந்தான்
தமிழன்

மீண்டும் அரியணை ஏறினான் ஆட்சி
பீடத்தில் அமர்ந்தான் உடலின் குருதி
தெளித்து உடலின் கடைசி நரம்பு
அவிழ்ந்து விழுந்தாலும் எழுந்து நின்று
நேருக்கு நேர் போட்டியிட்டு வெற்றிபெறும்
ஒரே இனம் தமிழ் இனம் என்று மார்பு தட்டி
முதல் கையெழுத்தை தமிழில் வடிவமைத்தான்
யுத்தம் நிறைவு பெற்றது
தமிழனால் ஆட்சியும் சிறப்பு பெற்றது


வாழ்க தமிழ்...!!! வளர்க தமிழன்..!!!

எழுதியவர் : மு.கருணாசபா ரெத்தினம் (14-Feb-18, 8:57 pm)
பார்வை : 350

மேலே