வாழத் தான் வாழ்க்கை
மீளாத் துயரினில் மூளும்
தீயினில் முழ்கி
கிடக்கிறேன் வாழ்வும் முடியாமல்
சாகவும் முடியாமல்...!
இப்படி சிந்தனை செய்யும்
மனத்திற்கு புரிவது
இல்லை வாழ்வு வாழக்
கற்றுத் தரும்
பாடம் இதுஆதலால்
இப்படி நிந்தனை
செய்யாதே மனமே ஒருபோதும்
இங்கு தொடர் தோல்வியாளனும்
இல்லை தொடர் வெற்றியாளனும்
இதை சிந்தையில்
எப்போதும் கொள்ள மன்மே
வெற்றி உமக்கே.....!

