கள்ளமில்லா உள்ளம்
மேகப் பொதிக்குள் பொத்தி வைத்த
ரோஜாக் குவியல்🌷🌷🌷🌷
பல்லில்லா வாயிலிருந்து பவழச் சிரிப்பு🌻
என்நெஞ்சில்தைரியமாகஉதைக்கும்
பிஞ்சு கால்கள்🌷
உறங்கும் போதும் புன்னகை பூக்கும்
அமுதுண்ட அழகான அதரங்கள்🌷
நஞ்சு கலக்கா பிஞ்சு நெஞ்சு🌷
கள்ளமறியா உயர்ந்த உள்ளம்🌷
இப்படியே குழந்தை யாகவே
எப்போதும் இருந்து விடத் தோணுதே🌷
மதி கெட்டுப் போன மானிடக் கூட்டத்தில் விதியே என வாழ்வதற்கு
வளராமலேயே இருந்திருக்கலாம்😴