துணிவு பழகு

பெற்று வளர்த்த தாய்,தந்தையரையே தெருவில் விடும் காலம்டா இது!
இதில் தாயின் கருவறையில் இருந்து கல்லறை வரைக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் சுமக்கும் பூமி நன்றியோடு கைம்மாறு செய்தவர் யாருண்டு?
உன்னைக் கேளு.
நான் என்னைக் கேட்கிறேன்.

மண்ணைத் தோண்டி விற்று மாபெரும் செல்வந்தனாகத் துடிக்கும் உலகிலே சரியானதைத் துணிந்து செய்யும் தைரியம் வேண்டும் நெஞ்சே.

பொன்னைக் கண்டும், பொருளைக் கண்டும் ஏது சாதித்தோம் நெஞ்சே?
பொன்னைவிட மண்ணே புனிதமான நெஞ்சே.

தாயில்லாமல், தந்தையில்லாமல் எப்படி பிறந்தோம் நெஞ்சே?
பெற்று வளர்த்தவர்களிடம் ஏன் ஈகோ கொள்கிறாய் நெஞ்சே?

அன்பைக் காட்டத் துணிவு கொள்.
அன்பின் மொழி பேச துணிவு கொள்.
கருணையின் ரூபமாய் வாழ துணிவு கொள்.
அநீதியை எதிர்த்து ரௌத்ர தாண்டவமாட துணிவு கொள்.

இச்சை அழிந்தால் இம்சை இல்லை.
அகிம்சை ஒன்றே வாழ்வின் கொள்கை.

போலித்தனம் அழித்திட துணிவு கொள்.
உண்மையாய் வாழ்ந்திட துணிவு கொள்.

துரோகங்களை மறவாதே நெஞ்சே.
மறந்தும் துரோகியாய் மாறிவிடாதே நெஞ்சே.

பசுமையான எண்ணங்களால் நெஞ்சிலே நல்லதொரு சேவையென விவசாயம் செய்ய பழகு.
அதன் பலனாய் கிடைக்கும் நற்செயல்களென்ற ஆரோக்கியமான உணவு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Feb-18, 11:51 pm)
Tanglish : thunivu pazhaku
பார்வை : 1883

மேலே