நிச்சயம் தோல்வியில்லை
குடும்பம் எனும் கூண்டினிலே
வாழவந்த பறவைகள் நாம்
பாதுகாப்பாய் இருக்கும் வரை
துன்பம் இல்லை துயரமில்லை
கூண்டு விட்டு கிளம்பிவிட்டால்
சுதந்திரமே மறுக்க வில்லை
கூடவே பிடிக்க வரும்
ஏமாற்றும் துரோகமும் தொல்லையும்
பறவை எனும் உயிரினுக்கு
கூண்டு நிச்சயம் தீதே
மனிதன் எனும் விலங்கினுக்கு
குடும்பம் நிச்சயம் மகிழ்வே
ரெக்கை இருக்கும் வரை
பறவை தொடும் நிலவினையும்
மனஉறுதி இருக்கும் வரை
நமக்கும் கிட்டும் வெற்றிகளே..
சோர்வூட்டும் காரணிகள் தீயூட்டுவோம்
நேர்மைக்குத் தலைவணங்கி நாம் நடப்போம்
லட்சியம் எதுவெனிலும் ஜெயித்திடுவோம்
நிச்சயம் தோல்வியில்லை சபதமேற்போம்