பறவையின் மனசு

கில்லி ஆட்டம் போட்ட சின்ன வயசு
சொல்லிப் போகும் நெஞ்சில் இனிய‌ நினைப்பு
பள்ளிப் ப‌ருவம் முடித்த இளைஞன் வயசு
வானம் நோக்கி என்றும் பறக்கும் மனசு

கல்லூரி வாசலில் அவன் காலடி வைத்தான்
மனதுற்குள் பல வண்ண ரெக்கை வளர்த்தான்
பறவையாக சுதந்திரமாய் உயரம் பறக்க விழைந்தான்
யோசிக்காத சில முடிவாலே முதலில் விழுந்தான்

காலம் தந்த‌ காயம் ஒருநாள் ஆறிப்போனது
கோலம் போட மகிழ்ச்சிவர வாழ்க்கை மாறிப்போனது
ஏலம் போட்டு கேலி செய்தோர் வெட்கப்படவே
ஆளும் வெற்றி மகனாய் அவனும் மாறிப்போனான்

இன்றும் கொண் டுள்ளான் மனதை பறவையாய்
அடுத்த கட்டம் தேடி அடிகளை வைக்கின்றான்
அடுத்தடுத்த வெற்றிகள் ஏனோ பலருக்கு வேடிக்கையாகும்
அவனைப் பற்றிய செய்திகள் செவியடைவது வாடிக்கையாகும்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 7:57 am)
Tanglish : paravaiyin manasu
பார்வை : 120

மேலே