அம்மா உனக்காக
அழகிய கனவாய்,
அற்புத தினமாய்,
அன்று..
கொடியின் மடியாய் - நீ..
தளிரின் உருவாய் - நான்..
காலங்கள் கடந்த பிறகும்
என் ஜனனம்,
நம் சகாப்தத்தில்
பூரிப்பூட்டும் தருணம்!
என் சிறகுகளின்
இறகுகள் உனதாகும்..
நான் பறக்கும்
திசைகள் பலவாகும்..
அதன் எல்லை
உன் வானம் தான்!
என் பாதம் பற்றிய
இப் பூமியும்..
என் வாழ்வைப் பற்றிய
உன் மனமும்
என்றும் உன்னதமே!