சிதையும் சிந்தை
யாரும் உள் நுழையா
இயலா தாழிட்ட
மனதிற்குள் எண்ணில்
அடங்கா எண்ணம்
அடக்கித் திரிகிறேன் பித்தானாக...!
அவன் அவனாக இல்லை
என்பதால் தான்
போலும் எண்ணம் போல்
பேசி உள்ளம்
தோன்றும் செயலைச் செய்து
மகிழ்வுக் கொள்ள...!
இப்படி ஒரு வாழ்க்கை
வரமா சாபமா
என புரியா வண்ணம்
குழம்பித் திரியும்
நடுத்தர வகுப்பு ஆணாக.....?

