அதிகாரம்

அட்ரைக்கும் அப்படிதான் வெளிநாட்டு பரங்கியரை தலைமேலே அமரத்தான் இடங்கொடுத்து வரவேற்றோம்

அதுபோல் இப்பொழுதும் அக்கயவர் எல்லாம் கொடுக்கும் சொற்பகாசுக்கு நம் உடலுக்குள் வளரும் நம் சிசுவையும்மே அறுத்து அழித்து புரையோடி போகும் அவலம் இருக்கு

இந்தியானா உலகிற்கு எளக்காரம்
தமிழ்னா இந்திக்கு எளக்காரம்

அஞ்சாணம் தட்டும் வழக்கொழிந்தது
மஞ்சளும் வேம்பும் பறிக்கப் பட்டது அது போதா தென மீத்தேனுக்கு
தஞ்சையும் போகுது நஞ்சையும் போகுது

தஞ்சமென எவர் வந்தாலும் இடங்கொடுக்கும் குணமுண்டு தமிழ்மக்களுக்கு அதுபோல தமிழக தலைவரும் தங்கம் வாங்கி தங்குபவரை வரவேற்பார் தங்கம் தந்து வந்தவனுக்கு முன்னுரிமை தந்து இருப்பவரை வருத்திவிடுவார் ஆனாலும் பாருங்கள் தலைவரும்
தன்சுற்றம் சூழ பலகோடி சேர்த்து சுகமாய் வாழ்வார் அவர் வாழ மற்றவரும் துணை போவர் துணை போவோருக்கும் துணை போகும்டி தகும்பணம் பனையோலையில் தரும்படி செய்து படிபடியாய் தொடர்ந்து முடிவில் படியாதபடி நிமிர்ந்து எவர் எதிர் கொள்வாரோ அவர் வருத்தி எடுக்கப் படுவார்

முடிவில் அடிநிலையில் வருத்தி எடுக்கப்படுவது என்னவோ
தமிழ் மொழியும் கலாச்சாரமுந்தான்
மெல்ல தமிழ் இனி சாகும் என்பது உண்மைதான்

எழுதியவர் : (21-Feb-18, 3:45 am)
சேர்த்தது : gurutamil
Tanglish : athikaaram
பார்வை : 357

மேலே