திருமண முறிவு
மானழகு மயிலழகு வாசம்கொண்டு
நகம்சதை பிரியாபாசம் கொண்டு
மடிதெரிய சேலைகட்டி
காளையரை திண்டாடச்செய்து
காதலெனும் பயிரை விதைத்து
மணமேடை ஏறி உறுதிபூண்டீர்
மணவறை கண்ட காதலரே
மணமுறிவு ஏற்றல்
மடமையினும் மடமை யன்றோ?
பெண்ணிற்கு பெருமை புகுந்தவீடுநாணத்தை
விண்ணிற்கு சேர்க்காமல்
மண்ணுக்குள் புதைப்பது
மாணத் தமிழச்சி கண்ட மார்க்கமா?