வாலி கவிதைகள்

ஹைக்கூ

தன் தலையைச்சீவியவனுக்கே !தண்ணீர் தருகிறதுஇளநீர்
தன் தோலை உரித்தவனின் கண்களில் நீர் வர வைக்கிறது வெங்காயம் - சுயமரியாதை !!!
அதனால் தான் பெரியாருக்கு அதிகம் வெங்காயம் பிடிக்கிறது .

மரம்

நம்மைக் கொண்டு எத்தனைசிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள் ஒருஇயேசுவைப்
படைக்க முடிய வில்லையே!

நிழல்

சாக்கடையில் விழுந்தாலும்
சந்தனத்தில் விழுந்தாலும்
எதுவுமே -ஒட்டிக் கொள்ளாமல் உள்ளது
உள்ளபடியே எழுந்து வருகிறது -என்னுடைய நிழல்.
நிழலுக்கு இருக்கும் - இந்தநிட்காமிய ஞானம் -
என்உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்அடியேனுக்கும் -கள்ளும் ஒன்று; காய்ச்சிய ஈயமும் ஒன்று!

எழுதியவர் : (21-Feb-18, 12:48 pm)
Tanglish : vaali kavidaigal
பார்வை : 236

மேலே