நெஞ்சு பொறுக்கதில்லையே

நம் செல்வங்கள் நடை பயில வேண்டி

கட்டாந்தரையிலும் பஞ்சுப்பொதி

விரிக்கும் மனநிலையில்

நாமிருக்க…

காரும் சேறும் பட்டு விடாமல்

செல்ல வேண்டும் என அறிவுறுத்தும்

அன்பின் விளிம்பாக நாமிருக்க

விளிம்பை பிடித்து

தரை படாமல்

தாவித் தாவி

செல்லும் மழலைகளை

கண்டு நெஞ்சுப் பொறுக்கதில்லையே

இந்நிலைக் கெட்ட மனிதர்களின்

அலட்சியத்தைக் கண்டு…..

மாற்றி விட தோணுகிறது….

ஏமாற்றி விடும் நம் சுயநலங்களை….

எழுதியவர் : (21-Feb-18, 12:35 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 2563

மேலே