தனிமை
தனிமையில் இருக்கும் போது மட்டும் தான்
உன் நினைவுகள் வருவது மட்டுமல்ல
நண்பர்களிடம் பேசும்போதும் ஏன்
வருகின்றன என தெரியவில்லை
வீட்டு ஞாபகம் வரும்போது மட்டும்
உன்னை மறந்து விடுகிறேன்
காயங்கள் பட்ட போது ஏன்
இதயம் வலித்தது இப்போது அந்த வலியே
பழகிப்போனது
உறவுகள் எல்லாம் மறந்து போகின
என் மனது வலிமையான பிறகு
விழுந்து விழுந்து எழுகின்றேன்
அப்படியும் என் மனது கல்லாக மாறிவிடும் என்று
நடிப்பதுதான் வாழ்க்கையாகி விடுமோ
என்று நினைத்து நினைத்து வருந்துகிறேன்
உண்மையான உறவை தேடினேன் அதுவும்
என் கையை விட்டு போகிவிடும் என்று உணர்கிறேன்
ஒரு காலத்தில் அழகை ரசிக்க தோனியது
இப்போது இந்த அழகே நமக்கு வேண்டாம்
என்று சில சமயம் நினைப்பேன்
தாமரை மலராய் எப்போது விரிந்திருக்கத்தான் ஆசை
ஆனால் அதுவும் அந்த தண்ணீரின் மேல் தான் மிதக்கிறது
அந்த தண்ணீரும் கண்ணீரும் ஒன்றுமல்லவா
சூரியன் என் வாழ்வில் உதிக்கும் என்று
தினமும் காலையில் அவரை பார்க்கிறேன்
அவரோ என்னை ஏமாற்றுகிறார் ஒவ்வொரு நாளும்
கொலுசு அணியத்தான் எனக்கு ஆசை ஆனால்
அந்த சலங்கையின் ஓலி கூட கேட்க
பிடிக்கவில்லை இப்போது காலை பார்ப்பதை விட
வாழ்க்கையை நினைத்து பார்ப்பதே பொழுதாகிவிடுகிறது
வெள்ளை நிறம் உள்ளவர்களை பார்க்காதே உறவுகளே
வெள்ளை மனம் உள்ளவர்களை மட்டும் பார்த்து வாழுங்கள்
செவ்வந்தி பூ தலையில் சூடுகிறேன்
அதுவும் வாடித்தான் போய்விடுகிறது சிறிது
நேரத்திற்குள் வாடாத மலரை தேடுகிறேன்
எல்லா மலரும் வாடிவிடுகிறது
பக்கத்திலே நீ இருப்பதுபோல உணர்ந்து
இந்த சதுர சுவரடிக்குள் தனியாக இருக்கும்
போது நினைத்து உணர்வேன்
பேனாமையோ எழுதும் போது கரைகிறது
நானோ ஒவ்வொரு நாளும் கரைகிறேன்