சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 45 களல நேர்ச்சிந முநு ஜேஸிநதி – தீபகம்

பொருளுரை:

வயிறு வளர்ப்பதற்காக அறுபத்து நான்கு கலைகளைக் கற்றாலும் (ஒருவனுக்கு) ஊழ்வினைப் பயனைத் தவிர வேறென்ன நிகழும்?

செல்வம், வறுமை ஆகிய இரண்டிற்கும் காரணம் நீயே; கருணையுடன் என்னைக் கண் பார்.

மிகுந்த விருப்பத்துடன் எள்ளுருண்டையைப் பெற்ற சிங்கிலி முனிவர் தன்னிச்சைப்படி அதை உண்ண முடிந்ததா?

(வேதசாரமாகிய) ஸ்ரீ ரங்கநாதனை விபீஷணன் இலங்கைக்கு எழுந்தருளச் செய்ய முடிந்ததா?

(ஆகவே) சரசகுணம் படைத்த நீயே த்யாகராஜனாகிய என்னைக் காக்க வேண்டும்.

பாடல்:
பல்லவி:

களல நேர்ச்சிந முநு ஜேஸிநதி
காக நேமி யரவை நாலுகு (களல)

அநுபல்லவி:
கலிமி லேமுலகு கா ரணம்பு நீவே
கருண ஜூட வே கடு புகோஸமை (களல)

சரணம்:
கோரி நூல கொண்ட தீஸி சிங்கி லிமுநி
கூர்மி பு ஜிஞ்சே நா வைரி தம்முடு
ஸாரமைந ரங்க நி இல்லு ஜேர்ச்செநா
ஸரஸ த்யாக ராஜவிநுத ப் ரோவவே (களல)

யு ட்யூபில் kalalanerchina - కళల నేర్చినా మును జేసినది- Deepakam - tyagaraja by M Balamuralikrishna என்று பதிந்து Dr.M.பாலமுரளி கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Kalalanerchina- కళల నేర్చినా మును జేసినది-Deepakam-tyagaraja - by GN Balasubramaniam என்று பதிந்து GN.பாலசுப்பிரமணியம் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Smt Radha & Smt Jalaxmi_ Isai Vizha concert என்று பதிந்து திருமதி ராதா & ஜெயலட்சுமி பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் T S Sankaran Flute 01 Kalala Nerchina Deepakam என்று பதிந்து T S சங்கரன் புல்லாங்குழலில் இப்பாடலை வாசிப்பதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-18, 10:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

சிறந்த கட்டுரைகள்

மேலே