அமானுஷ்யம்

கிராமத்து ரயில் நிலையம்
வண்டி வந்து நின்றது
பச்சை விளக்கு வந்தது
விசில் ஊதினார் 'கார்டும்'
ஓடும் ரயிலில் யாரோ ஏறினார்
நிழல் தெரிந்தது பிளாட்பார்மில்
ஆனால் அந்த பெட்டிக்குள்ளே யாரும் இல்லை
இது தினமும் பகலில் நடப்பது
பத்தாண்டிற்கு முன் மாணவன் ஒருவன்
ஓடும் வண்டியில் இருந்து விழுந்து
அகாலமரணம் அடைந்தானாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Feb-18, 9:22 am)
Tanglish : amanushyam
பார்வை : 40

மேலே