மூன்றாவது முட்டாள்
ஒருநாட்டின்அரசன்தன்கல்விமந்திரியிடம்ஃ
இன்று மாலைக்குள் நாட்டில் உள்ள மக்களிலிருந்து மூன்று முட்டாள் களைபிடித்து வாரும்,இல்லாவிட்டால்
உமக்கு தண்டனை உறுதி என்றார்★
உமது பணி சிறப்பாக நடக்கிறது,
எல்லோரும் அறிவாளிகள் என்று
நீர் சொல்வதை நம்ப முடியவில்லை,
ஆகவே நீராகவே முட்டாள்களை பிடித்து வாரும்,நானாக கண்டு பிடித்தால் நாடு கடத்துவேன் என்றார்.அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
அரசர் வேறு மந்திரி யிடம் பணியை ஒப்படைத்தார்,
அவரும் தேடி அலைந்து திரிந்து
ஒருவனைப் பிடித்தார். அவன் கழுதையின் மேலமர்ந்து சுமையை தன் தலையில் சுமந்து வந்தான்,
கேட்டால், கழுதை தனது எடையை மட்டுமே தாங்கும், அதனால் சுமையை நான் சுமக்கிறேன் என்றான்அவனும் வேறு நாட்டவன்,பின்னர் வேறு யாரும் கிடைக்கவில்லை,
அரண்மனை திரும்பினார்.
அரசரிடம் ஒரு முட்டாளை ஒப்படைத்தார்.எங்கே இன்னும் இரண்டு முட்டாள்கள் என்று அரசர்
கேட்டார்.மந்திரி சொன்னார் , மந்திரி பதவியில் இருந்து கொண்டு மக்கள் பணி செய்யாமல் இல்லாத முட்டாளை தேடித் திரிந்த நான் இரண்டாவது முட்டாள் என்று சொன்னார், சரி, மூன்றாவது முட்டாள் யார் என்று கேட்க,
தன் மந்திரிகளையும், குடி மக்களையும்,நம்பாமல் எனக்கு வெட்டி வேலை கொடுத்த நீங்கள் தான் என்றார்★மன்னர் தவறை உணர்ந்து மந்திரிகளுக்கு பரிசளித்து மகிழ்ந்தார்★