எவன்டா எம் பையனக் காசன்னு கூப்பிட்டது

யம்மா அந்தப் பசங்கெல்லாம் என்னக் 'காசன்' -ன்னு கூப்படறாங்க?
😊😊😊😊😊
எவன்டா எம் பையனக் 'காசன்'-ன்னு கூப்பிட்டது? ஏன்டா, எம் பையன் எருமை மாடு மாதிரி வளந்து நிக்கறான். அவனப் பாத்தா காசு ஆசை பிடிச்சவன் மாதிரி தெரியுதா? நானும் என்னோட ஊட்டுக்காரனும் கட்டட வேலை செஞ்சாலும் எங்க பையன செல்வாக்கா வளக்கறமுடா. அந்தப் பேரச் சொல்லிக் கூப்பிட்டவன் இங்க வாடா எம் முன்னாடி.
😊😊😊😊😊
யக்கா நாந்தான் யக்கா அவனுக்கு ஒரு பட்டப்பேரு வச்சேன். நாங்க எங்க நண்பர்கள் ஒவ்வொருத்தனுக்கும் ஒரு திரைப்பட நடிகர் பேர பட்டப்பேரா வைப்போம். உம் பையனுக்கு 'கமலஹாசன்'னு பேரு வச்சோம். இன்னிக்கு வரைக்கும் உம் பையனுக்கு நாங்க வச்ச பேரு தெரியாது. அவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்ககூட வெளையாட வந்தபோது நாந்தான் அவன 'ஹாசன்' சீக்கிரம் வாடான்னு கூப்பிட்டேன். அது அவங் காதுல 'காசன்'-ன்னு விழுந்திருக்கும். எங்கள மன்னிச்சிரு யக்கா.
😊😊😊😊😊
ஏன்டா எம் பையன் தங்கக் காசனா இல்ல வெள்ளிக் காசனா இல்ல தகரக் காசனா.? நீங்க யாருடா அவுனுக்குப் பட்டப் பேரு வச்சு அவனக் கூப்படறதுக்கு?
இனிமேல எங் கபாலி செல்லத்துக்கு யாராவது பட்டப்பேரு வச்சா அவந் தோல உரிச்சு உப்புக் கண்டம் போட்டுருவேன். சாக்கிரதை. ஓடிப் போங்கடா கசமாலங்களா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😊😢😢😢😢😢😢😢😢😢😢சிரிக்க அல்ல. சிந்திக்க. முடிந்தவரை திரைத் தமிழைத் தவிர்க்க. ■■◆◆◆◆■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆■■◆◆◆◆◆◆◆◆◆◆◆
Hasan - (Arabian,Indian origin) =
Indian: laughter, beautiful, Good
Arabian : handsome, good, nice

எழுதியவர் : மலர் (22-Feb-18, 12:08 am)
பார்வை : 357

மேலே