என் கணவருக்காகவே நான்
💙என் கணவருக்காக நான் எழுதிய காதல் கதை💙💞
💓💓💓💓💓💓💓💓💓
மாமா
எங்கருக்க...
திண்டிவனத்துல தான்டி இருக்கேன்...
உன்ன பாக்கணும்...
உடனே வா
இப்ப தானடி இறக்கி விட்டன்.
என்னாச்சு.
எதுனா பிரச்சினையா...
அதெல்லாம் ஒன்னுமில்ல
நீ பாத்து கிளம்பி வா
ம்ம்...
இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பன்.
ம்ம்..
பாத்து வாங்க...
பிரபா எங்கடியிருக்க
உள்ள ஆளயே காணோம்.
நான் உள்ளயிருக்கேனு யார் சொன்னா...
திரும்பி வெளிய பாருங்க.
தோட்டத்தில இருக்கன்...
பாத்துட்டேன் டி...
ஏன் இங்க இருக்க.
உள்ள போகலயா என்று கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தேன்.
அவள் உடனே மடியில் படுத்துக் கொண்டாள்.
விரலை பற்றிக் கொண்டாள்...
என்னை மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.
நானும் அவளை பார்த்துக் கொண்டே இருந்தேன்.
பின் சத்தம் கேட்டு மீண்டும் தன்னிலைக்கு வந்தோம்
பிரபா ஏன்டி வெளிய இருக்க
தலை வலிக்குது மாமா...
அதான் வெளிய வந்துட்டேன்.
பிரபா உடம்புக்கு எதுனா செய்தா
வா மருத்துவமனைக்கு போகலாம்.
அதெல்லாம் வேண்டாங்க.
உங்க மடியில் கொஞ்ச நேரம் படுத்தேனா சரியாகிடும்.
என்னங்க
சொல்லுடி
என்ன மனிதர்களே இல்லாத
அழகான இடத்துக்கு கூப்டுபோங்களேன்.
பொய் இல்லா இடத்துல
உங்க கூட மட்டும் தனியா இருக்கணும்...
உங்கள பாத்துக்கிட்டே
அங்க வாழணும்...
உங்க மடியிலயே கிடக்கணும்...
உங்க மடியிலயே என் உயிர் பிரியணும்
உன்னை இப்படி எல்லாம் பேசாதேனு
சொல்றனே
என் வார்த்தைய மதிக்கிறீயா நீ
ஹா ஹா...
எதுனா ஒன்னு கேட்டா பதில் சொல்லணும் .
சிரிக்கக் கூடாது.
கவிதை தானே மாமா.
வா போகலாம்...
சரி போகலாம் வா ...
தூக்கிக்கோ மாமா...
உன்னை எப்பொழுதும்
தூக்குவேன் டி...
புளி வாங்கலையோ
புளி
எருமை வாங்கலையோ
எரும எரும...
எது அது ...
என்ன தூக்கிட்ருக்கே அது தான்...
ஏய் போடி...
கீழ போட்ருவேன்டி...
போடுடா பாப்போம்...
என்ன டா வா ...
மாமா மாமான்னு கூப்டியேடி...
அதெல்லாம் நடிப்பா...
சொல்லு பிரபா நடிப்பா...
யாரும் உனக்கு இங்க ஆஸ்கார் அவார்டு தரல.
வழிய பாத்து போயா...
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...
என்ன ஸ்விச்சுவேஷன் சாங்கோ?
செட் ஆகல....விட்ரு...
அவளோடு இப்படி வாதம் செய்வது எப்பொழுதும்
சுகமானது தான்...
அவளை அள்ளி அணைத்து தூக்கிக்கொண்டு நடக்கயில்
என் மேனி எங்கும்
சொல்ல முடியா ஏதோ ஒன்று அரங்கேறுகிறது.
அவளிலும் அரங்கேறியிருக்கும் என்று நினைக்கிறேன்
ஆனால் கள்ளி அதை மறைக்கிறாள்...
அவளை நானறிவேன்...
அவள் கண் பொய் சொல்லாது...
அவள் கண்ணில் காதல் பெருக்கெடுத்து ஓடுவதை நான் பார்த்தேன்...
மாமா
ஐ லவ் யூ
என்று சொல்லி
இதயத்தில் முத்தமிடுகிறாள்.
அவள் அன்பில் கரைகிறேன்.
அவளில் கரை சேருகிறேன்...
ஒரு நிமிடம் உறைந்து போனேன்.
நான் வானத்தில் பறக்கிறேனா மிதக்கிறேனா என்று கூட தெரியவில்லை
என் கையை கிள்ளி
என்ன நடக்கும் போதே கனவா...
என்று கேட்கிறாள்.
என்னது கனவா???
அதானே பாத்தேன்
நீயாவது அவ்ளோ பாசமா பேசறதாவது.
ஹா ஹா
ஹா ஹா
அது நிஜம்னு எனக்கு தெரியும்டி...
ஹா ஹா...
அவளை தூக்கிக்கொண்டு நடக்க
என்னை கண் இமைக்காமல் பார்க்கிறாள்...
காரில் அவளை அமர வைத்து
காரை எடுக்க
அவள் பிளேயரில் பாடலை வைத்து விட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
என் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள்...
அரைமணிநேர பயணத்தில் மலை காடு அருவி ஆறு என ஒரு சேர இணைந்த இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றேன்...
அவள் கண் ஏதோ என்னிடம் பேச விழைந்தது.
என்னை பார்த்து நீங்க அப்பாவாக போறீங்க
என்று சொல்லி சிரித்தாள்...
நானும் அவளை பார்த்து
பெத்துக்கொடுடி என்று சிரித்தேன்.
இதே போன்ற ஒரு இடத்தில் வைத்து தான்
நான் அப்பாவாகப் போகிறேன் என்று அவள் வயிற்றில் என் கையை வைத்து சொன்னாள்.
அந்த ஞாபகம் நெஞ்சில் வந்து ஒட்டிக் கொண்டது.
அவள் என் முன் இரு கைகளையும் விரித்து
என்னை கட்டிக்கொள் என்று சொல்லாமல் சொன்னாள்.
நான் அவளை வாரி அணைத்துக் கொண்டேன்.
என் முகத்தில் அவள் இதழ்கள் படாத இடமே இல்லை.
இப்படியே இருந்துவிடலாம் மாமா...
உன் மீது நானும்...
என் மீது நீயும்...
அணைத்துக் கொண்டு இங்கேயே இருக்கலாம் என்றபடியே
என் மார்ப்புக்கூட்டில்
சாய்ந்தாள்...
சரி இருக்கலாம்.
என்ன ஆச்சு இன்று என் செல்லத்திற்கு...
ஒரே பாச மழையாக பொழிகிறாள்...
என் கையை அவள் நெஞ்சில் வைத்து அழுத்தி
மாமா என்று சுவாசிக்க முடியாமல் துடிக்கிறாள்
பிரபா பிரபா இங்கே பாருடி என்ன பாருடி
அவளிடம் இருந்து பதில் இல்லை
மாமா என்ற வார்த்தையை தவிர. அவள் மெல்ல நிலத்தில்
சரிந்தாள்...
நான் அவளை என் மார்போடு அணைத்து அமர்த்தி
வாயோடு வாய் வைத்து என் மூச்சுக்காற்றை
என் பிரபாவிற்கு சுவாசமாக அனுப்பிக்கொண்டே இருந்தேன்.
பெரிய மூச்சில்
சுவாசம் வந்து கண் விழித்தாள்.
பிரபா
மாமா
பிரபா
என்ன விட்டு போய்டாதடி.
நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல...
நானும் உங்கூடவே செத்துடுவன்டி
மாமா
என்று இரு கைகளால் ஆரத்தழுவி தடவி கொடுத்து
அழாதே மாமா...
உன்னை இப்படி என்னால பாக்க முடியாது.
நான் நல்லா தான் இருக்கன்.
எனக்கு ஒன்னும் ஆகல பாரு.
மாமா உன்ன விட்டு எங்கயும் போகலடா
உங்கூடயே தான் இருக்கன்.
ஆமாம் உன்னை தான்
பல பெண்கள் சுற்றி சுற்றி வருகிறார்களே.
அப்புறம் நான் இறந்தவுடன் என்னோடு இறந்து விடுவாய்...?
எனக்கு காது குத்தியாச்சு மாமா...
ஹா ஹா...
எல்லா பெண்களும் நீ இல்லையே பிரபா...
ஹா ஹா...
நம்பிட்டன் நம்பிட்டன்...
நிஜமாவே நான் சொல்றது உண்மை பிரபா...
நீ இல்லாத உலகத்ல
எனக்கென்ன வேலை ...
தெரியும் மாமா...
உன்ன எனக்கு நல்லா தெரியும் மாமா...
நீ முதலில் தூங்கு பிரபா
எதையும் யோசிக்காதே என்று சொல்றேன் கேக்க மாட்ற.
அப்புறம் நீ துடிக்கிறத பாத்து உயிரே போய்டுது.
என்பதற்குள்
என் மடியில்
என் கையை சிறு குழந்தை போல் மார்போடு வைத்து அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கிறாள்.
பிரபா
நீ தான்டி எனக்கு முக்கியம்...
யாருக்கோ பிரச்சினை என்று யோசித்து யோசித்து நீ இறந்துவிடுவாயோனு பயமா இருக்குடி.
நீ எனக்கு வேணும்
என் வாழ்நாள் முழுவதும்...
உலக பிரச்சினை எல்லாம் யோசி...
என் மன வேதனைய யோசிக்காதே.
நான் உனக்கு தான் மாமா...
உனக்கு மட்டும் தான்
என்று தூக்கத்திலேயே உளறிக் கொண்டிருந்தாள்.
அவளின் கார்குழலை வருடி
அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன்...
இறக்கும் பொழுதும் உன் மடியில்
உன்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
உன் கண்ணை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அதில் தவழும் நம் காதலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
இறக்கும் பொழுதும் உன்னை மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன்...
உன் கையை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறேன்...
உன்னை ஆரத்தழுவிக் கொள்கிறேன்.
என் உலகம் என்பது நீ மட்டும் தான் மாமா...
நான் அதிகம் நேசிப்பதும் யோசிப்பதும் உன்னை பற்றித் தான்...
உனக்கு ஒன்றும் ஆக விடமாட்டேன் மாமா.
என் உயிரை கொடுத்தாவது உன் உயிர காப்பாத்துவன்.
நீ இல்லாம நான் இல்ல மாமா...
என்று நித்திரையிலயே நினைவுகளை உளறிக் கொட்டிவிட்டாள்...
நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறாள்...
தென்றல் காற்றும்
தேக சிலிர்ப்பும்
தேனிசையும்
நந்தவனமாய் காடும் ...
அதில் அவளும் நானும்...
என்னை விட்டு
ஒரு அடி எடுத்து வைக்காத மாமா...
மனசால
தாங்க முடியல.
என்னை பிடித்துக் கொண்டே இரு.
ஆடைகள் ஏதுமில்லா என் மார்பினில் உன்னை வைத்து இடைவெளியில்லாமல் கட்டிக்கொள்வேன்...
அடிப்பாவி உறக்கத்தில் தான் ஒளிவு மறைவில்லாமல் உள்ளத்தை சொல்வாயா...
நிஜத்தில் ஏட்டிக்கு போட்டி பேசறது.சண்டை போடறது...
அவளை எழுப்பி
அங்கே கிடைத்த பழங்களையும் , கிழங்குகளை வேக வைத்து ஊட்டி விட்டேன்.
எனக்கு மட்டுமே ஊட்டி விடுவியா
கொடு...
என்று எனக்கு ஊட்டி விட்டாள்...
இருவரும் ஒருவரை ஒருவர் ருசித்து பசியாறி
ஆற்றில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தோம்...
பின் ஒருவரையொருவர் போர்வையாக்கி உறங்கிவிட்டோம்...
என் காதில் மாமா என்று கூறி எழுப்புகிறாள்...
எனக்கு தூக்கம் வருகிறதடி என்று இழுத்து அணைத்துக்கொண்டேன்.
என்னை பதிலுக்கு அணைத்து நெற்றியில் முத்தமிட்டு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா என்கிறாள்...
காட்டில் மின்மினிகளை பிடித்து வந்து பறக்க விட்டாள்...
காட்டில் கிடைத்த பொருட்களை கொண்டு எனக்கு பரிசை உருவாக்கி இருக்கிறாள்.
அந்த பரிசை என்னிடம் கொடுக்கும் பொழுது தான் ஒளி வெள்ளம் சூழ்ந்தது...
மலைத் தேனை பார்த்து மலைத்துப் போனேன்.
எப்படி இவள் இதை எடுத்திருப்பாள்...
அந்த தேன் அடையை வெட்டி அவள் வாயில் தேனை ஊற்ற
அவள் முதலில் என்னை குடிக்க வைத்தாள்...
வெட்டுவதற்கு கூட கல்லை தான் கத்தி போல் தீட்டி வைத்திருந்தாள்...
பிறந்த நாளுக்கு ஒளியை அணைக்கக் கூடாது...
ஒளியை ஏற்ற வேண்டும் என்பாள்...
காட்டில் இருந்த நாற்றம் மிக்க பூக்களை மாலை தொடுத்து என் மார்பில் அணிவித்தாள்.
மீண்டும் நாங்கள் திருமணம் செய்து கொள்வது போலவே தோன்றியது.
எப்படி பிரபா இதெல்லாம் ...
நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்.
சொல்ல வார்த்தையே இல்லை...
தேனை எப்படி எடுத்தாய்.
அதுவா மலை மீது ஏறி எடுத்தேன்...
எனக்காக எவ்வளவு சிரமப்பட்டுருக்க.....
ஐ லவ் யூ சோ மச் டி...
உனக்காக செய்வது எனக்கு எப்படி மாமா சிரமமாகும்.அது என் வரம் மாமா...
எல்லாம் ஓகே
இன்னும் மாமனுக்கு ஒன்னு தரலையே
என்னது?
உன்னைத்தான்..
ஆங் ...
எப்ப பாரு இதே பொழப்பு தான் போல....
நானா...
மகா ஜனங்களே
நீங்களே கேட்டுக்கோங்க இந்த நியாயத்தை......
தூங்கும்போது மட்டும் என் ஆசையை தூண்டறா மாதிரியே பேசறது.
நானா...
என்ன நானா...
நீயே தான்டி...
சொன்னடி...
நம்பமாட்டேன்...
போய் அந்த புலிக்கிட்ட கேட்டு வா போ...
பெண்ணா அப்படித் தான் இருப்போம்.
அப்படி வா வழிக்கு.
சரி வா தூங்கலாம்.
தூங்கனது போதும் கும்பகர்ணா ..
வா குளிக்கலாம்.
இவ்ளோ சீக்கிரமா ?
ஆமாம் வா...
மௌனமான அந்த இரவில்
அருவியின் ஓசை அழகு...
இருள் சூழ்ந்த இந்த காட்டில் அந்த நிலவு அழகு...
யாருமில்லா இந்த இடத்தில் ஆடையில்லா நாங்கள் அழகு...
இங்கே இருட்டுக்குக் கூட கண்கள் கிடையாது.
இங்கே அனைத்து மிருகங்களும் உண்டு...
மனித மிருகங்களை தவிர...
நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் மட்டும் நேசித்து காதலித்து புசிக்கும் மிருகங்கள்...
என் விரலை பிடித்து
அருவியில் நனைந்தபடி
எனக்காக பாடலை தேர்வு செய்து என்னோடு நடனமாடுகிறாள்.
அருவியில் எங்கள் அழுக்குகளோடு மன அழுக்குகளும் துன்பங்களும் கரைந்து போக கண்டேன்.
மகிழ்ச்சி மட்டுமே இங்கு இருக்கிறது.
இங்கு பழி இல்லை பாவம் இல்லை...பொய் இல்லை நடிப்பு இல்லை...மனம் முழுக்க அன்பு மட்டுமே உள்ளது...
இந்தா
இது என்னது பல்லு வெளக்கு வேப்பங்குச்சி..
பல்லு வெளக்கியாச்சு..
அடுத்து என்ன நல்லா குளி..
இவ்ளோ நேரம் என்ன தான் பண்ணேனா
ஆட்டம் போட்ட
ஹா ஹா
நீ எங்கிட்ட உத வாங்க போற பாரு
நீ என்ன கொல்லலாம்.
உனக்கு இல்லாத உரிமையா.
இப்படி பேசாத நான் உன்ன கொன்னுடுவன்.
ஹா ஹா
அதை தானே நானும் சொன்னேன்.
இந்த வேட்டி சட்டை போட்டுக்கோ மாமா...
இது எப்ப.போன வாரமே..
உனக்கு
புடவை தான்...
பட்டு வேட்டி
பட்டு சட்டை
பட்டு புடவை
கலக்கற பிரபா
இந்த துண்டு எதற்கு...
துண்டு எதற்கா
இதற்கு தான் என்று
என் மீது துண்டை வீசி
இழுத்து அணைத்துக்கொண்டாள்.
பிடிச்சிருக்கா...
ரொம்ப பிடிச்சிருக்கு
விரலில் வாங்கி வைத்த மோதிரத்தை அணிவித்தாள்...
கழுத்தில் செயினை போட்டு விட்டாள்.
என்னடா
செக்கு உலக்கை மாதிரி நிக்கற........
வார்த்தையே வர மாட்டேங்குது பிரபா...
திக்கு முக்காடி நிக்கறன்.என்று சொல்லிக் கொண்டே தூக்கி சுற்ற ஆரம்பித்து விட்டான்.
ஐய்யோடா...
ஹா ஹா...
அது அவர்களின் காடு
அங்கு ஆட்கள் ஏது
ஓடி பிடித்து விளையாடும் இந்த மான்கள்...
ஊடல் செய்து கூடல் புரிந்து என்றைக்கும் காதல் செய்யும் புறாக்கள்
நீ சோர்வாக இருக்கிறாய் பாரு
என் மடியில வந்து தூங்கு.
அதெல்லாம் இல்ல..நான் உனக்காக
எனக்காக
உனக்காக விருந்து வைக்கணும்.
நீதான்டி என் விருந்து.
அது இருக்கட்டும் வா போகலாம்.
மாமா பனங்காய் மாமா
இரு ஏற்றேன்.
பாத்து ஏறு...
ஏய் நுங்கு...
உனக்கு தர மாட்டேன் பங்கு...
பொறந்த நாளுன்னு பாக்குறேன்.
வாய்ல நல்லா வருது.
அவளை பார்த்துக் கொண்டே பனங்காயை வெட்ட முற்பட்டேன்.
லேசாக கையில் கீறல்...
எருமை ஒழுங்கா பாத்து வெட்டு
என்று விரலை புடவையால் அழுத்தி பிடித்தாள்...
பாத்ததனால தான இப்படி
ஆங்...ஒன்னும் இல்ல.....
மாமா இரு ...
அங்கு இருந்த பூக்களை பறித்து கையில் பூச்செண்டு தந்தாள்...
வாழையிலையில்
அவள் தேடி தேடி பறித்த பல வித கனிகள் ...(மா பலா வாழை ...புளி...)
கிழங்கு இடம்பெற்றிருந்தது...
பலா பழத்தை பிரித்தது பழத்தை விட இனிப்பான தருணம்.
பலாவை விடுத்து பல முறை அவரையே கண்டேன்.
உணவு என் பசியை போக்கியதா
அவர் பார்வை என் பசியை போக்கியதா
காளான் எங்களுக்கு குடை பிடிக்க
காலங்கள் கடந்து
காலனை கடந்து இமை பொழுதும் பிரியாமல் சேர்ந்தே
வாழ்வோம்...
வா போகலாம்.
இங்கேயே இருந்து விடலாமே...
பசங்க வர்றாங்களாம்
ஃபோன் பண்ணி சொன்னாங்க.
போகணுமா...
போக வேண்டாம்...
பசங்க ஏமாந்துடுவாங்க போகலாம்...
போயிட்டு உடனே வந்துடணும்.
டீல் ...டீல்...டீல்...
என் அருகில் வந்து
என் நெற்றியில் முத்தமிட்டு.என்னை
தூக்கிக் கொஞ்சினாள்.
முகம் முழுவதும் முத்தங்கள் இட்டு
காருக்குள் தூக்கிச் சென்று அமர்த்தினாள்.
என் அருகில் அமர்ந்து என் தலையை
மார்பில் புதைத்து இப்பொழுது அம்மா அப்பா இருந்தால் நன்றாக இருக்கும் என்றாள்.
ஆம் என்றேன்.
அவள் துடிப்பை கேட்டுக்கொண்டே.
அம்மா நீங்கள் பிறந்தவுடன்
உங்களை அரவணைத்து
உங்கள் நெற்றியில் முத்தமிட்டார்கள்.
அப்பா
உங்களை தூக்கிக் கொஞ்சி
உங்களை முத்தமழையில் நனைத்தாராம்.
என்னிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்கள்.
என்று சொல்லி என்னை மடியில் வாங்கிக் கொண்டாள்.
மறு நொடி என் மீது சரிந்து விட்டாள்.
பிரபா போகலாமா
ம்ம்..போகலாம் மாமா...
ஆமாம் நீ எப்படி என்னை தூக்கினாய்.
அதுவா நிறைய ரிகர்சல் பண்ணோம்ல
நம்ம வீட்டு புளி மூட்டைய தூக்கி...ஹா ஹா
அத ஒரு எரும சொல்லுதே.
ஹா ஹா...
மாமா வண்டிய நிறுத்துங்களேன்.
மாம்பழம் தோட்டத்துல விக்கிறாங்க .
பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.வாங்கிட்டு போகலாம்.
நம்ம வீட்லயே இருக்கேடி.
நம்ம வீட்ல தான் இன்னும் பழுக்கலையே.
ம்ம் சரி டி.
அண்ணா
என்னம்மா
அண்ணிக்கு பூ வாங்கி கொடுங்கண்ணா.
என்னங்க....
நீ போய் வாங்குமா.
நான் பின்னாடி வரேன்.
சரிங்க...
முழம் எவ்ளோ தங்கச்சி...
பத்து ரூபாய்ணா...
அஞ்சு முழம் தாம்மா...
படிக்கறியாம்மா...
ஆமாண்ணா ஒன்பதாவது.
நல்லா படிக்கணும் என்ன...?
சரிங்கண்ணா.
அம்மா இதல ஒரு அஞ்சு கிலோ தாங்க.
துப்பாக்கி சத்தம் கேட்டு திரும்புகயில்
அவரை நோக்கி கைதி துப்பாக்கியோடு ஓடி வருகிறான்.பின்னால் ஐந்தாறு போலீஸ் துரத்திக்கொண்டு வருகிறார்கள்.
மாமா என்று கத்தியபடி அவர் அருகில் ஓடுகிறேன்.
பிரபா நீ இங்கே வராதே என்று சொல்லி அவர் என்னருகில் வர
நான் அவர் அருகில் ஓடி வந்தேன்.
அவர் தலையில் துப்பாக்கியை வைத்து
ஒரு அடி எடுத்து வைத்தால் இவனை சுட்டு விடுவேன் என்று மிரட்டினான்.
என் உயிர் என்னிடம் இல்லை.
மாமா என்று கத்தி அவரை பிடித்து கீழே தள்ளிவிட்டு .
துப்பாக்கியை பிடிக்க முயன்றேன்.
அதற்குள் அவன்
துப்பாக்கியால் என்னை சுட்டுவிட்டான்.
உடனே போலீஸ் அவனை சுட்டு கொன்றது.
குண்டு என் நெஞ்சை பதம் பார்த்தது.
நான் மாமா என்று அழைத்தபடி மண்ணில் சரிந்தேன்.
மாமா என் அருகில் வந்து
ஏன்டி இப்படி பண்ண.லூசு ...
ஐய்யோ பிரபா...
ஏன்டி வந்த.
நான் தான் வராதன்னு சொன்னேன்ல.
உங்களுக்கு ஒன்னும் இல்லல்ல.
பிடிச்சி தள்ளிவிட்டன்.
எனக்கு ஒன்னுமில்ல.
ஹா ஹா
இந்த பூ எனக்கு தானே .
வச்சி விடுங்க....
நடிக்காத பிரபா .
நான் செம கோபத்ல இருக்கன்.
உனக்கு எதும் அடிபடல இல்ல...
இல்ல போதுமா.
ம்ம்...
இப்ப தான் எனக்கு உயிரே வந்தது.
நீ கேட்டு நான் செய்யாமல் இருந்ததில்லை
உனக்காக பூவை வைக்கிறேன்.
என்னால தாங்க முடியல பிரபா...எழுந்திருடி அவளை மடியில் கிடத்தி
வேகமாக காரை ஓட்டுகிறேன்.
பிரபா...பிரபா ...என்ன பாரு பிரபா...
எந்த அசைவும் இல்லாமல் எனக்கு மிகவும் பயமா இருக்கு பிரபா எழுந்திருடி.
மாமா ....மாமா...
பிரபா ... என்னடி ...
நான் உன் பக்கத்ல தான்டி இருக்கன்.
கண் முழிச்சி என்ன பாருடி.
உனக்கு ஒன்னும் ஆகாதுடி.......
ஆக விடமாட்டேன்டி...
மாமா ...மாமா...
இந்தாங்க மாமா ஒரு
அம்மா கொடுத்தார்கள்
என்று
குங்குமத்தை நீட்டி எனக்கு வைத்து விடுங்கள் மாமா என்கிறாள்.
என் மடியில் சுவாசிக்க முடியாமல் என் பிரபா துடிப்பதை என்னால் காண முடியவில்லை.
அவளின் ரத்தத்தில் நான் மூழ்கி நனைந்து இருக்கிறேன்.
அவள் குருதி அவ்வளவு சீக்கிரம் உறையாது.
பிரபா இப்பொழுது இது முக்கியமாடி
எனக்கு முக்கியம் மாமா...
என் தாலியிலும் வைத்து விடுங்கள் மாமா...
வைத்து விட்டு என் கண்ணில் தாலியை ஒற்றி எடுத்து
மீண்டும் என் நெஞ்சத்தில் அணைத்து வையுங்கள் மாமா...
உங்களுக்கு முன் இறக்கப்போகிறேன் மாமா..
கடைசி பொழுதும்
உங்களை பார்த்துக் கொண்டு தான் இறக்கப்போகிறேன்
உங்கள் மடியில்
உங்களை கோர்த்தணைத்தபடி இறக்கப்போகிறேன் மாமா...
இதற்கு மேல் என்ன வேண்டும் எனக்கு மாமா...
மாமா...மாமா.....
அவள் உயிர் அடங்கிவிட்டது
என்பதை என்னால் ஏற்க முடியவில்லை...
வாகனத்தை நிறுத்திவிட்டு அவள் வைக்க சொன்ன குங்குமத்தை ...
அவள் சொன்னது போல் இட்டு வைத்து
நான் கட்டிய தாலியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
தாலி எப்பொழுதும் வெளியே இருக்கக்கூடாது.
எப்பொழுதும் என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பாள்...
தாலியை மார்பில் ஒட்டி வைத்து
அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்...
பார்த்துக்கொண்டே இருந்தேன்...
அவளோடு வாழ்ந்த நாட்கள் நிமிடங்கள் நொடிகள் நெஞ்சோடு நிறைந்து நின்றது...
அவளை கட்டியணைத்துக் கொண்டேன்...
என் விழிநீர் அவளை நனைத்தது...
அவளின் முந்தியோடு
என் துண்டை இணைத்து முடிச்சு போட்டேன்
இருவரையும் இணைத்து ஒரு கயிறால் கட்டிவிட்டேன்.
எங்களை யாரும் பிரித்து விடாதீர்கள்...
எங்களை பிரிக்காமல் இணைத்தே அடக்கம் செய்யுங்கள் என்று காகிதத்தில் எழுதி கையில் வைத்துக் கொண்டேன்.
அவளில் இருந்து என்னையும்
என்னில் இருந்து அவளையும்
பிரிக்க முடியாது .அதே வண்ணம் இறுக்கி அணைத்து முத்தமிட்டேன்.
என் மூச்சு அவள் மூச்சோடு கலந்து காற்றில் கரைந்தது...
நாங்கள் இருவரும் எங்கள் காட்டுக்குள் மீண்டும் நிம்மதியாக வாழ்கிறோம்...
அங்கே நாங்கள் மட்டும் தான்...பொய் நடிப்பு வஞ்சகம் இல்லா உலகம்...
உண்மை மட்டும் வாழும் எங்கள் உலகம்...
உனக்கே உனக்காக
உன் மனைவி
~ பிரபாவதி வீரமுத்து