காத்திருக்கிறேன்

கோபகாரி என்று தெரிந்தல்லவா அன்றென்னை காதலித்தாய்
எதற்காக இன்றென்னை
கடிந்து கொள்கிறாய்
காதலிக்கும் முன் என் கோபங்கள்
தான் எனது அழகென்றாய் - ஆனால்
இன்று அதுவே எனது பிரச்சனை என்கிறாய்
நான் மாறவில்லை ஆனால்
நீ மாறி விட்டாய் - கேட்டால்
எல்லாம் உன் தப்பென்கிறாய்
ஆம் உன்னை நான் காதலித்தது
உண்மையில் என் தப்பு தான் என உணர வைத்து விட்டாய் என்னை
இருந்தும் உன்னை விலக
மனம் மறுகின்றது
ஆனாலும் என் கோபம் உன்னை
பழிவாங்க துடிக்கின்றது - அதை
வென்று கரம் பிடிப்பாயா என்னை??? இல்லை மீண்டும் என்னை கடிந்து
என்னை விட்டு விலக போகிறாயா??
முடிவை உன் கையில் தருகிறேன்
இருந்தும் உனக்காக காத்திருக்கிறேன் நீ வருவாயென......

எழுதியவர் : (28-Feb-18, 9:01 pm)
சேர்த்தது : Sharmi
Tanglish : kaathirukiren
பார்வை : 456

மேலே