காதல்
சிற்ப சாஸ்திரம் கற்க
பள்ளிகள் உண்டு
சிற்பி ஆவதற்கு;
ஜோதிடம் கற்க
ஆசிரியர்கள் உண்டு
ஜோதிடம் பயில ,
ஜோதிடர் ஆவதற்கு;
கலைஞன் ஆக,
கலைக்கல்லூரிகளுண்டு;
காதல் பயில மட்டும்
பள்ளிகள் இல்லை,
கல்லூரிகள் இல்லை
காதல் கற்றுப்பெறும் கலை அல்ல
அதுஇயல்பாய்
ஒரு பெண்ணிற்கும்-ஆணிற்கும்
இடையே சட்டென தோன்றும்
சொல்லத்தெரியா உணர்வு
அதை அனுபவிப்பவர்
அவர்கள் இருவர் மட்டுமே
மன்மதன் தொடுக்கும் அம்பு
அது யாரை எப்போது வீழ்த்தும்
யாரறிவார்
சொல்லித்தெரிவதில்லை
கற்கமுடியாதது காதல்
அது ஓர் அப்போர்வை அனுபவம்
பெரும் பொருளைக் கூட தேட
முயலாதார், காதலை மட்டும்
தேடி அலைய சளைப்பதில்லை
அலைந்தாலும் கிட்டாது
வாங்க முடியாத பொருள் அது
அதுவே காதல்