சரக்கு தீர்ந்து போச்சு
இன்னும் கூட்டம்
விரைந்து வேகமெடுத்து
வரிசையில் நிற்க
நின்றவரை தள்ளிமிதித்து
நெருக்கி முன்னேறி
மனம் தாவத்தாவ
பையும் பணக்கையும்
சாடிவிரைய
கூட்டம் இன்னும்...
பசியும் தாகமும்
காமம் குதறிய
நாய் போல் ஆக்கியும்
அசுரவேகம்...
என்முன் எஞ்சிய மனிதர்
நல்லவேளை
முனிசாபமாய் விலகி தொலைய
என் கார்டு வாங்கிய
கடைக்காரன் (கடைஞன்!)
புன்முறுவலாய் சொன்னான்
சரக்கு தீர்ந்து போச்சு.