உழைப்பில் ஒரு வரலாறு

இருக்கின்ற நேரத்தில் இமைத் திறக்காமல்
கிடைக்கின்ற நேரத்தில் வினை புரியாமல்
வீணாய் பொழுதைக் கழிக்கும்
மனிதனே!
எழுந்திடு! கணப் பொழுதும் கண் அயராதே
நீ கண் உறங்கிடவே காலம் கரைந்திடும்
உன் புகழ் கை நழுவிடும்
விழிப்பாய் இரு, உயர்ந்ததை நினை,
போராடு, வெற்றி கொள்
இன்றைய உறக்கத்தில் நாளையைத் தொலைத்திடாதே
நாளைய கனவால் இன்றை தொலைத்திடாதே
உழைத்திடு! உழைத்திடு!
இன்றே, இப்பொழுதே உழைத்திடு!
நல் உலகம் படைத்திடு!
நாளைய வரலாற்றில் இடம் ஒன்றை பிடித்திடு!

எழுதியவர் : (1-Mar-18, 4:14 pm)
சேர்த்தது : kalaipiriyai
பார்வை : 73

மேலே