என் முதுகோடு ஒட்டிக்கொள்
நாம் புகழ்வோம்
நீ என்னை
நான் உன்னை
நாம் அவரை
அவர் இவரை
இவர் சிலரை
சிலர் பலரை
விடாமல் புகழ்வோம்
எதற்கு வம்பு
என்பதை விடவும்..
இருந்து தொலைக்கட்டும்
என்பதை விடவும்..
புகழ்ந்து விட்டு
போய் தொலைவோம்
நிம்மதியாய் உறங்கலாம்
ஒருவர் ஒருவருக்காக.