ஆழியின் காதல்

ஆழியின் குரல்

தோன்றிய நாள் முதல் இன்று வரை
பிறை அழகினில் மயங்கி தினம் அவள்
முகம் கான பேரலையாய் எழும்பி இயலாமையால் வீழ்கிறேன்... அவள் ஈர்ப்பு ஒவ்வொரு நொடியும் என்னை இயங்கத்தூண்டுகிறது
அன்றொருனாள் ஆதவன் வெளிச்சத்தில் பெண் பாவை கரையோரம் நடமாடக்கண்டேன் மதியழகை மிஞ்சிடும் அழகினை கண்டதில்லை இந்நாள் வரையிலும்... கண்டுவிட்டென் இன்று
அவள் பாதம் தொட்டிட உருண்டோடி விழுந்தெழுந்து நெருங்கிவிட்வேன் அவள் பாதத்தினை ...
அவள் அஞ்சிவிட்டாள் போலும் பின்நோக்கி நடந்துவிட்டாள் முயற்சி செய்தேன் விடா முயற்சியாக தொட்டுவிட்வேன் அவளை....
காதல் வயப்ப்ட்டுவிட்டேன் அவளிடம் என் மொழியில் அலையின் ஓசைக்கொண்டு வெளிப்ப்டுத்தினேன் அவள் புரிந்துகொள்ளவில்லை ....
சென்றுவிட்டாள் என்னைவிட்டு
ஆதவனை வேண்டினேன் உதவிக்கரம் நீட்டினான்.
முகில் கொண்டு காற்றாக உரிஞ்க்கொண்டான்
தேடினேன் அவளை ஆகாய மார்கமாக
கண்டுவிட்டேன் அவளை
அவள் குளித்திட குட்டையாக வரம் பெற்றேன்
என் காதலி வந்தால் தினம் என்னால் நனைந்து செல்கிறாள் நான் அவளை நினைந்து தவிக்கின்றேன் அவள் வருகைக்காக .....

இப்படிக்கு நீர்
-விக்னேஷ் குமார்

எழுதியவர் : விக்னேஷ் குமார் (1-Mar-18, 3:00 pm)
சேர்த்தது : விக்னேஷ் குமார்
Tanglish : aazhiyin kaadhal
பார்வை : 84

மேலே