இரத்தத்தின் மொழி __அன்பே

இரத்தமும் சதையும்
ஊனும் உடலும்
எலும்பும் பிண்டமுமாக.....

மனிதன் மக்கும்
மக்காத குப்பையாய்
வியாபாரச் சந்தையில்........

சிரியாவோ காஞ்சிபுரமோ
சிதரும் இரத்தத்தின்
மொழி___ அன்பே!!!!

கருணையை எரித்துவிட்டு
அடைகளம் காப்பகத்தில்....

மனித உயிர்க்குடிக்கும்
இரத்தக்காட்டேரி கூட்டம்....

தொடர்
மரண ஒலங்களில்
ஒலித்துக்கொண்டே
இருக்க உணர்வே இல்லாது
ஓய்ந்து போய்:
ஒடிந்த இதயத்தில்
கவிதை வரவில்லை
கண்ணீரே வருகிறது!!!!!
ரம்யா கார்த்திகேயன்

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (1-Mar-18, 1:01 pm)
பார்வை : 61

மேலே