பூ சிந்திய நீல நொடிகள்

இயங்குவோம்
தோள் பற்றி இறங்கு.
தொல் மனம் விளம்பும்
காரியக்கூச்சலை
ப்ரமித்து நீ
பூவினை துளைத்தாடு.
நீங்கா நெடும் பசியை
காரிருள் உண்ண
என்னுள் சிலிர்த்து
ஈரத்தில் தீ பரப்பு.
ஒளிவெப்பம் திமிர
குகைக்குள் அனலூட்டு.
மின்னலை திரித்து
காட்டினுள் மிதக்கும்
உன் மந்திரப்பாக்களை
இந்திர விழிகளாக்கி
தேகத்தில் தெளி.
ஞானத்தில் நீண்டு
நெளியும் புழுவினை
நாம் களைவோம்.
வா இயங்கு...

எழுதியவர் : ஸ்பரிசன் (1-Mar-18, 5:35 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 3428

மேலே