அழகு
செம்மீன்கள் வரைந்த
கண்ணழகா?
செவ்விதழ் போர்த்திய
வாய் அழகா?
சேர்த்து கட்டிய
சிகையழகா?
இணை சேர மறுக்கும்
காதுகள் அழகா?
சேய் அமரும்
இடைகளா?
அல்லது
சேலை மறைத்துள்ள
புதையல்களா?
இவை எதும் இல்லை
நீ உரைக்கும்
தாய்மொழி செந்தமிழே
உயரழகு.....