எலி ஒரு குறிப்பு

ஆம்...
நிச்சயம் தெரியும்
தொலைந்து விட்டது.
வலி வேதனை
குருதி எதுவுமின்றி
தேடுகிறேன்...
அலமாரி, கைப்பை
பாத்ரூம் இடுக்கு...
காணவேயில்லை.
எலிகளின் மீதான
குரூரம் நிற்கவேயில்லை.
ஓசையின்றி
சாதித்து விட்டனவா?
மனைவியின் பார்வை
குத்தியெடுக்கிறது...
எப்படிச் சொல்வேன்
அவளிடம் இதனை,
விழித்து பார்க்க
வலக்கால் கட்டைவிரல்
காணாமல் போனதென்று.

எழுதியவர் : ஸ்பரிசன் (2-Mar-18, 3:56 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : eley oru kurippu
பார்வை : 107

மேலே