அழகான கோபக்காரி
இதயத்தின் அருகில் சாயும் மானே,
கோபம் கொண்டது ஏனோ,
இதமாய் முத்தமழையை பொழிந்து
கோபத்தீயை அணைக்கவா,
உன் பொய்கோபக்கடலில் முழ்கி
இதழ்முத்தை எடுத்திடவா,
கண்ணீர் வரவழைத்து நடிக்கதே,
சுட்டுவீரல் காட்டி மிரட்டதே,
விழியால் அம்பெய்து கொல்லதே,
உன்முகத்தில் விளையாடும் புருவத்தை கண்டு
என் கண்கள் இமைத்திட மறுக்குதே,
உன் செயல்களையெல்லாம் கண்டு வியந்துபோகிறேன்,
போதும் என்று கோபத்துடன் இருக்கும்
உன்னை அணைத்திடும் போது
என்மார்பில் நீ அடித்திடும் அடிகள்
ஒவ்வொன்றும் எனக்கு இனிக்குதே,
இன்னும் கொஞ்சம் சுவைக்கவே
உன்னை சீண்ட தேனுதே.,