தமிழ் ஆளும் எப்படி

தமிழன் நாடாளும் நாள் அருமையான தலைப்பு.
ஆனால் இது சாத்தியமா என்றால்?ஆம் என்ற பதில் நம் எல்லோர் மனதிலும் உணர்சிகள் பொங்க எழும்,இது ஒரு வேலை மெர்சல் படத்தின் அந்த ஒற்றை பாட்டினால் கூட உண்டாகிருக்கும் என்பது எனது எண்ணம்.
சரி விசயத்திற்கு வருவோம் தமிழ் நாடாள வேண்டுமா அல்லது தமிழன் நாடளவேண்டுமா என்ற கேள்வியும் இங்கே பிறக்கிறது.முதலில் தமிழ் வீட்டில் ஆள்கிறதா?இல்லை நாக்கையே இன்னும் திருத்த முடியாத தமிழனாகத் தானே இன்றும் நாம் வாழ்கிறோம் குடிக்கும் தண்ணீரில் கலப்படம் என்றால் கூட பொங்கி எழும் நாம் பேசும் மொழியில் கலப்படம் பண்ணி பேசுகிறோம் ஒன்று கலப்படம் அல்லாமல் பேசி ஆங்கிலத்தை வாழ வைப்போம் அல்லது கலப்படம் இல்லாமல் பேசி தமிழை வாழ வைப்போம் இரண்டும் கலந்து புது மொழி உருவாக்க தேவையில்லை அலாஸ்காவில் ஈயாக் மொழிக்கு நடந்தது தமிழுக்கும் நடக்காமல் முதலில் காப்பாத்துவது முக்கியம் அல்லவா மொழி அழிந்தால் இனம் அழிந்துவிடுமே அந்த புரிதல் முதலில் மனதின் ஓரம் தோன்றிவிட்டாலே தமிழ் மெல்ல வீட்டில் வாழ ஆரம்பிக்கும் மெல்ல தெருவில் ஆழ ஆரம்பிக்கும் பின் ஊரில் ஆழ ஆரம்பிக்கும் பின் நாட்டில் ஆழ ஆரம்பிக்கும் முதலில் தமிழ் ஆளட்டும் பின் தமிழன் தன்னால் ஆளுவான் நாட்டை மட்டும் அல்ல இந்த உலகத்தையே.....
மனிதனை படைத்தது கடவுளா என்பது எனக்கு தெரியாது ஆனால் மதத்தை படைத்தது மனிதன் தானே படைத்த எல்லாம் ஒரு நாள் அழியும் என்று சொன்னால் இந்த சாதியையும் மதமும் ஒரு நாள் தமிழன் மூளை அழுக்கில் இருந்து அழியும் அன்று தமிழ் தாய் பெருமையாக தன் பிள்ளையை தூக்கி இந்த உலகம் திரும்ப தாங்கி நிற்பாள்.தமிழ் தாய் அன்று பெருமை பொங்க ஆனந்த கண்ணீர் வடித்து சொல்வாள்
"எத்தனை யுகங்கள் காத்துக்கிடந்தேன் உன் காலுக்கு அடியில்
சாதி பிரிவில் நீங்கள் என்னை இரத்தத்தால் குளிப்பாட்டிய போதும்
மத சண்டையால் நீங்கள் என் மண்டையை உடைத்த போதும்
அந்நியன் என் மார்பை அறுக்க நீங்கள் வேடிக்கை பார்த்த போதும்
கண்டவனால் நான் மானபங்க பட்ட போதும் நீங்கள் கண்மூடி உறங்கியிருந்தீர்களே என் செல்வங்களே
என் அழகையெல்லாம் கார்ப்பரேட் வெறிநாய்கள் சூறையாடிய போதும்
சிரித்து ரசித்து நீங்கள் கடந்து போனீர்களே என் குழந்தைகளே
நான் இறக்கும் தருவாயலும் நீங்கள் ஒண்றிணைத்தீர்களே என் வீர விதைகளே
நீங்கள் நீண்டு வளர்ந்து வாழ்க வாழ்க வாழ்கவே............."

எழுதியவர் : ச சே.... (4-Mar-18, 1:32 pm)
சேர்த்தது : sankar1986
பார்வை : 55

மேலே