நினைவுகள் சுமையாகி போனது

காத்திருந்த நினைவுகள் கண்களின் ஓரம் பூவாய் பூத்திடவே//
நிகழ் காலமும் சுமையாகி போகிறதே
உறக்கம் தொலைத்த காதலை கரை சேர்க்கவே//
என் கனவுகளை மறந்து //
அவள் இதயத்தை சுமக்கவே வாழ்ந்திருந்தேன் //
அவளும் சம்மதம் சொல்லி அருகில் வந்து//
என் உறவே புனிதம் என்றாள்//
உன் உலகமே நான் என்று சொல்லியே//
என் மனதில் உயிரானாள்/
நான் நோக்கும் திசை எல்லாம் அவள் என கண்களில் வந்து சென்றாள்//நாளை
காலம் கனியும் //கனியும் என்னுடன் சேருமென //
தினம் தினம் காத்திருந்தேன்

சதி செய்யும் உறவுகளால் //
கனியாக வரவேண்டிய உயிர் காதல் இணைப்பு //
அறுக்கப்பட்ட செய்தியால் /
/ காலம் கடந்தும் நினைவுகள் சுமையாகி போனது

எழுதியவர் : காலையடி அகிலன் (4-Mar-18, 11:57 am)
பார்வை : 333

மேலே