கிராமிய கவிதை

எம்பாட்டு...

காட்டுவழிப் பாதையிலே
வண்டி கட்டி போற மச்சான்
வரப்பு மேல ஒத்தையிலே
பூத்திருக்கேன் நான்தானே

நாட்றாங்கால் காற்றைபோல
மெல்லதானே வீசியிருக்கேன்
நாளெல்லாம் உனக்காக
நேசத்தோட காத்திருக்கேன்

வெள்ளிநிலா முளைக்குங்குள்ள
வெரசா நீ வந்திடணும் ,
அல்லி மலர் ஆசையெல்லாம்
ஆவலோடு தீர்த்திடணும்
என்னாசை மச்சானே


என் ஏக்கமெல்லாம் நீதானே
உள்ளுக்குள்ள துடிதுடிக்குது உசிருக்குள்ள உன் நினப்பு/
கண்ணாலம் பண்ணவான்னு உன் மேலே ஆசை வந்திருச்சு//
மாடு கட்டி கொண்டு ஓடும் வண்டில்
வீறாப்பாக் கெளம்பி உன்னை புடிச்சுப்புட்டேன்//
என் ஆசை மைத்தினியே //
உன்னை தாலி கட்ட போகிறேன் //
உன் கூட வாழ போகிறேன் புரிஞ்சிருக்கா
முல்லப்பூ சிரிப்பழகி //

இன்னுமே ஏன் தவி தவிச்சு நின்ருக்கிட்டு
நிக்கிறியே

எழுதியவர் : காலையடி அகிலன் (4-Mar-18, 11:55 am)
பார்வை : 470

மேலே