காதல்
மான் விழியே உந்தன்
பார்வையால் என் மனதை
உன் வசப் படுத்திவிட்டாய்
பார்வையால் மௌனமொழி பேசி,,
இனி தயக்கம் ஏன் பெண்ணே,
ஜோடி குயிலாய் சேர்ந்திடுவோம்
காதல் கீதம் பாடி
ஆடி மகிழ்ந்து வருவோம்
ஜோடி மயில் போல
பொன்னான இந்த
வசந்த காலமதில்