என்னது காலா-வா

ஏன்டி கும்மி எங்க அக்கா கொழந்தைக்குப் பேரு வைக்கணும். ஒரு நல்ல பேராச் சொல்லுடி.
😊😊😊😊
'காலா'- ன்னு வையு ங்கடி அம்மி.
😊😊😊😊😊
என்னது கொழந்தைக்குக் 'காலா'-ன்னு பேரு வைக்கிறதா?
😊😊😊😊😊
ஏன்டி அமுதா, அங்க என்னடி 'அம்மி', 'கும்மி' - 'காலா'ன்னு பேசிட்டிருக்கிறீங்க.
😊😊😊😊😊
பாட்டி நான் அமுதா. என் தோழி பேரு குமுதா. அவள நான் 'கும்மி'ன்னு கூப்புடுவேன். அவ என்னை ' அம்மி' -ன்னு பாசமா கூப்பிடுவா.
😊😊😊😊
உங்க ரண்டு பேரு பேரையும் அம்மிக்கல்லியே வச்சு நசுக்கணுண்டி. பேரு வைக்கறாங்க பாரு பேரு. சரி அந்தக் 'காலா' - என்னடி?
😊😊😊😊
அது இப்ப வெளியாகப் போற ரஜினகாந்தோட படம்.
😊😊😊😊😊
'காலன்' -ன்னா 'எமன்'-ன்னு அர்த்தம்.எமனக் கூப்பிடணும்னா 'காலா' என் உயிரை எடுத்துக்கொள்'னு பழைய திரைப்படத்திலதான் சொல்லுவாங்க. இப்ப எதுக்கு இந்த அம்மிக்கல்லும் கும்மிக்கல்லும் 'காலா' -ன்னு செல்பேசில பேசிட்டிருந்தீங்க.
😊😊😊
நாங்க ரஜினி ரசிகைங்க. அதனால என்னோட மூத்த அக்காவுக்குப் பொறந்த கொழந்தைக்கு 'காலா' -ன்னா பேரு வைக்கப்போறோம்.
😊😊😊😊😊😊😊
போங்கடி கூருகெட்ட ரசிகைக் கழுதைங்களா. எம் பேரனுக்கு 'எமன்'ன்னு பேரு வச்சீங்க மூணுலயும் மொத்திடுவேன். போங்கடி போக்கத்த கழுதைங்களா. கொழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்லுவாங்க. அந்தப் பச்ச மண்ணுக்கு 'எமன்' -ன்னு பேரு வையுங்கடி அப்பறம் கவனிக்குறேன் உங்கள்.