உயிர்க் காத்தான் நண்பன்
ஆழ்ந்த தூக்கத்தில் நான்
கொடுங் கனவு ஒன்று கண்டேன்
'ஆ' , 'நண்பா ' வென்று அலறயதாய்
அதைக் கேட்ட என் தாய் கூறினான்
அது அதி காலை கனவு
கண்விழித்து உட்கார்ந்துவிட்டேன்
வாசலில் 'யாரோ'வென்று கூறி
என் தாய் கதவு திறக்க , அங்கு
நின்றிருந்தான் என் உயித்தோழன்
'என்ன நீ இங்கு இந்த காலை வேளையில்'
என்று என் தாய் வினவ, நண்பன் சொன்னான்
'அம்மா, இன்று உங்கள் மகன் ஊருக்கு
போக வேண்டாம் ..........காரணமாய்தான்
கூறுகிறேன் , மேலும் ஒன்றும் கேட்காதீங்க;னு
சொல்லிவிட்டு , என்னைப் பார்த்தும்
அதையே சொல்லிவிட்டு, சென்றுவிட்டான்....
அன்று நானும் பயணம் மேற்கொள்ளவில்லை.
மறுநாள் செய்தியில் படித்தோம்,நான்
செல்லவிருந்த ரயில் விபத்துக்குள்ளானது!
இப்போது புரிந்தது நான் நண்பா என்று
கனவில் அலறியது என் உயித்தோழனுக்கு
கேட்டுவிட்டதுபோல், அவன் அக்கணமே
என் துயர்ப் போக்க என் உயிர்காக்க அங்கு
அதிகாலையில் என் இல்லம் தேடி வந்திருக்கிறான்!
இதில் திடுக்கிடும் செய்தி,"என் நண்பன் அதே
அதி காலையில் கண்ட கனவில் , நான்
பயணத்தில் ஆபத்தில் இருப்பதாய்"
நான் நண்பா என்று அவல குரல் எழுப்ப, அதை
கேட்டவன் போல் என் இல்லம் வந்து,
எப்படி சொல்வதென்று தெரியாது
எப்படியோ சொல்லிவிட்டு போய் இருக்கிறான்!
என் உயிர்க் காத்தான் என் நண்பன்
,