சிரியா

ரசாயனம் கொண்டு
தகர்க்கப்பட்ட
மனித உடல்களை
கொத்தி தின்னும்
கழுகுகள் கூட
கொத்து கொத்தாய்
செத்து விழும்
தேசம் அது...
சிரியா...

பசித்திருந்த குழந்தை
வெடித்து சிதறிய மண் தரையில்,
தேடித் திரிந்து
தாயின் மடி அடைந்தும்
அழுகையை அடக்கவில்லை...
ஐயோ பாவம்
அதற்கு தெரியவில்லை
பிணத்தின் மடியில்
பால் சுரக்காதென்று...

வெடி குண்டுகளுக்கு பயந்து,
தன் தாயின் கரம் பிடித்து
வீதிகளில் ஓடிவந்த குழந்தை... திடீரென தேடுகிறது,
தான் பிடித்து வந்த தாயின் கை மட்டும் தன் கரங்களில் துண்டிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து...

மனித உயிர்களை
கொன்று புதைத்து...
எரிபொருள்
தோண்டித் திருடும்...
அமெரிக்க ரசியாக்கள்...

ஆதிக்கநாடுகளின்
அதிநவீன ஆயுதங்களுக்கான
சோதனை களமாய்...
சிரியா...

சிதறுண்ட
சிறு பிள்ளைகளின்
உடற்கூறுகள் பிழிந்து
உதிரம் வடித்து
உலக இயந்திரம் இயக்க
எரிபொருள்
திருடும் வல்லரசுகள்...

எழுதியவர் : ஆதம் (5-Mar-18, 12:08 pm)
சேர்த்தது : Adam
Tanglish : siria
பார்வை : 100

மேலே