பெண்ணே எல்லாம் என் தவறே

உன் சிரிப்புகள்
யதார்தமானதாய்
இருந்திருக்கலாம்...
அதீதமாய் நான்
கற்பித்து கொண்டதே
என் தவறு...
உன் தேடல்கள்
எனக்கு பின்னே
வேறானதாய்
இருந்திருக்கலாம்...
எனக்கானதென
என் புரிதல்களே
என் தவறு...
உன் குமுறல்கள்
சாதரணமாக
இருந்திருக்கலாம்...
உனக்கு நான்
தனித்துவமானவன்
என எண்ணியதே
என் தவறு...
உன் தூரப்பார்வைகள்
ஏதோ ஒன்றாய்?
இருந்திருக்கலாம்...
எனக்கு காதலில்
தொலைநோக்கு பார்வை
இல்லாததே
என் தவறு...

எழுதியவர் : சுரேஷ் குமார் (7-Mar-18, 12:12 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 1355

மேலே