தடம்மாறவில்லை

நெஞ்சக்கூட்டுக்குள்
சிறைப்பட்ட
இதயமாய்
என் நினைவுக்கூட்டுக்குள்
சிறைப்பட்ட
நீ
என் இயக்கமானாய்
உனைத்தழுவிய
எனதியக்கம்
தடாலடியாய் முடங்கியதே
தவிப்போடு தடுமாறி நான்
தடம்மாறி நீ
விலகி நின்று பார்க்க
நெஞ்ச கூட்டுக்குள்
துடிக்கின்ற இதயமாய்
நீ என் நினைவு
கூட்டிற்க்குள்
தடம்மாறவில்லை..,
நா.சே..,