மனிதி

#மனிதி

அன்று தான் யாரும் எதிர்பார்க்காத அந்த தருணம்..மணி சரியாக இரவு 1மணி இருக்கும்..ரத்த வெள்ளம் ஓடோடியது அந்த குடியிருப்பு பகுதியின் கார் பார்க்கிங் ஏரியாவில்,அது.. சற்று வசதியானவர்கள் வாழும் இடம்",
கத்தினாலோ, கதறினாலோ உதவ யாரும் முன் வர மாட்டார்கள்..

"பக்கத்து, எதிர், வலது, இடது" என குடியிருப்பவர்கள் யார் யார் என யாருக்கும் தெரியாது, யாரும் தெறிந்துக்கவும் முற்படவில்லை..அப்படி ஒரு நரகத்தில் தான் குடியேறினாள் பாப்பம்மா..அவள் விரும்பி அங்கு போகவில்லை.. தன் மகள் அங்கு தங்கி ஒரு ஆபிஸில் வேலை பார்க்கிறாள்..
ஹோட்டலில் சாப்பிட்டு, சாப்பிட்டு வயிற்று வலி, அல்சர் என அவதிப்பட்ட அவளுக்கு உதவியாய் இருக்க முற்பட்டு இங்கே வந்தாள், தன் மகளுக்கு உதவியாய் இருக்க வந்தவளுக்கு தான் இந்த நிலமை..

ஏன் மா, நேத்து நீ நைட் டூட்டின்னு சொல்லிட்டு போனியா அதான், ஆணம் (குழம்பு)காச்சில, நான் ஒருத்தி தான பக்கத்துல வாங்கிக்கெல்லாம்னு பக்கத்து வீட்டு பெல்லஹ் அடிச்சன், ரொம்ப நேரம் ஆகியும், யாரும் தொறக்கவே இல்ல, சரினு எதித்த வீட்டு பெல்லை அடிச்சன், ரொம்ப நேரம் கழிச்சு ஒரு பொண்ணு வந்து தொறந்துச்சு, உள்ள அவன் புருஷன் போல இருக்கு "என்னமா யார் நீங்க, என்ன வேணும்".?? இல்லாமா குழம்பு வைக்கலாமா, குழம்பு வேணும்..?? நான் எதிர்த்த பிளாட் தான், அப்படியா நான்
உங்களை பார்த்ததே இல்லையே என்றாள்.. நான் இங்கே வந்து ரெண்டு நாள் ஆவுது, என் மகக்கூட இருக்கன், என்றாள்... ஓ அப்படியா அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் அம்மாவா.. இருங்க அம்மா வரேன்..என்றாள்...

சற்று நேரத்துக்கு பிறகு, ஒரு ப்ரெட் பாக்கெட்டுடன் வந்து கொடுத்தால், இதங்கம்மா இத சாப்பிடுங்க..என்றாள்..
ரொம்ப நல்ல பொண்ண இறுக்காமா..
"அம்மா நீ ஏம்மா அங்க போய்லாம் கேக்குற", இது நம்ம கிராமம் இல்லாமா
போய் யார் வீட்டு பெல்லையும் அடிக்காத ஓகே வா..இங்க எல்லாம் ஒரு மாதிரி,அந்த பொண்ணோட கேரக்டர் சரி இல்லைனு, எல்லாம் பேசிப்பாங்க; ஏன், நானே 2,3 டைம் சில ஆம்பளைங்க வரத பார்த்து இருக்கேன், சோ.. சமைக்கலான எனக்கு போன் பண்ணு, நா ஆர்டர் பண்ணி தரேன் வீட்டுக்கு சாப்பாடு வரும் ஓகே வா...
இனிமே இப்படி செய்யாத என்றாள்.. பாப்பமாவும், தவறை ஒற்றுகொண்டு மௌனம் காத்தவளாய் இருந்தாள்.. சரி என்று சொல்லிவிட்டு அவளும் ஆபீஸுக்கு கிளம்பி சென்றாள்..

சரி என தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.. பாப்பம்மா..மதியத்திற்கு ஒரு சாம்பார்,ரசம் மற்றும் உருளைக்கிழங்கு பொரியலை தயார் செய்து விட்டு, குளிக்க சென்றாள்..பின்னர், வருவதற்குள் காலிங் பெல் அடித்தது..
"இவ நைட் தான வருவா..இப்ப யாரு என கேள்வியுடன்..கதவை திறந்தால்..வெளியே அந்த எதிர் பிளாட் பொண்ணு..அம்மா ரொம்ப பசியா இருக்கு, டைம் ஆச்சு இதுக்கு மேல சமைச்சு சாப்பிட முடியாது.. சாப்பிடுலமா சாப்பிடாச்சா என்றாள்..

"என்னமா, இப்படி கேக்குற வாம்மா வந்து சாப்பிடு".. உள்ளே..பாப்பம்மாவும், அவளும் சாப்பிட்டு கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனர்.."அம்மா சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு", இது போல சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு..
என் அம்மா கையால சாப்பிட்ட மாதிரி இருக்கு.. சூப்பரா இருக்கு..

ஏம்மா,இப்படி சொல்ற, நீயும் என் பொண்ணு மாதிரி தான் மா, எப்ப சாப்பிடும்னு நினைக்கிறியோ அப்போ இங்க வாம்மா என்றாள் பாப்பம்மா...
அவள், பாச மிகுதியால் கண்ணீர் வடித்தாள், அது கண் மையுடன் சேர்ந்து ஒரு கரு கண்ணீராய் பாய்ந்தது... என்னம்மா ஏன் கண் கலங்குற சாப்பிடுமா என்று ஆறுதல் தந்தாள் பாப்பமம்மா..

பின், அவள் தானாக வந்து தன்னை பற்றி கூறினாள், "அம்மா, என்ன பத்தி எல்லாம் ஒரு மாதிரி சொல்லி இருப்பாங்களே, ஏன் உங்க பொண்ணே சொல்லி இருப்பா.." அவங்க சொன்னது லாம் சரி தான் மா..நா அந்த மாரி பொண்ணு தான்..என்றாள்... பாப்பம்மா திகைத்து நின்றாள்...

என்னமா சொல்ற, ஹ்ம்ம்..அம்மா...என்றாள் அவள்.."எனக்கு 18 வயசுல, படிக்கிறனு சொல்லியும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.."21 வயசுல ரெண்டு புள்ளைங்க.."இதுல என் புருஷன் ஒரு மகா குடிகாரன்.."தினமும் வீட்ல சண்டை உன் அப்பன் வீட்டுக்கு போய் காசு கொண்டுவானு.."இந்த டார்ச்சல் ஆஹ் என் அப்பா போய்டாறு.."அப்புறம் தினமும் வீட்ல சண்டை தான்..ஒரு நாள் விடுஞ்சும் என் புருஷன் வீட்டுக்கு வரல, எங்க போனான்னு, தெரியல..பிறகு சேதி வந்துச்சு ஏரிலே மூழ்கி இறந்துட்டார்னு...நான் நிலை தடுமாரிட்டேன்..நமக்கு இருந்த ஒரு ஆதரவும் இல்லன்னு...பிறகு, 22 வயசுல ரெண்டு குழந்தைகளோட எப்படி வாழம்னு தெரியல...அங்க போய், இங்க போய்.. வேறு வழி இல்லம்மா இங்க இருக்கன்..பிள்ளைங்க ரெண்டு பேரையும் ஹாஸ்டல் ஆஹ் சேத்துடன்.. நல்ல ஸ்கூல் நல்லா இருக்காங்க..அது,போதுமா எனக்கு...
என்று கண்ணீர் வடித்தாள்..பாப்பமாவும் தன் நிலை மறந்து கண்ணீர் சிந்தினாள்...

சரிம்மா...நான் போறேன் டைம் ஆயிடுச்சு நாம அப்புறம் பாப்போம் என்று தன் பிளாட்க்கு சென்றாள் அவள்..நேரம் ஓடோடியது பாப்பம்மா இன்னும் அவளின் வாழ்க்கையை பற்றி கவலைப்பட்டு கொண்டு இருந்தாள்..
இதை பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டும், என்று நினைத்தாள்.. சொன்னாலும் ஏதும் நடக்காது என்பதையும் உணர்ந்து அமைதியாய் இருந்தாள்...

சிறிது நேரம் கழித்து மகள் வரவே, இருவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர்..அவள் வந்ததை பற்றியும் , அவளை பற்றியும் பாப்பம்மா தன் மகளிடம் சொல்லவில்லை..

தூக்கம் வராதவளாய் படுத்து கொண்டு இருந்தாள் பாப்பம்மா...அப்போது மணி தோராயமாக ஒரு 11.30 இல்ல 12 இருக்கும், ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது...ஏங்கி இருந்தோ கேட்பது போல இருந்தது...வர வர சத்தம் அதிகமானது..சிறிது நேரம் கழித்து ஒரு சத்தம் படாரென்று..பின்னர் காரின் சத்தம் விடாமல் அடித்து கொண்டே இருந்தது...

தன் மகளை எழுப்பினாள் பாப்பம்மா, அவள் சன்னல் வழியாக எட்டி பார்த்தாள்...கார் பார்க்கிங் ஏரியாவில் ஒரே கூட்டம்...பாப்பமாவும் தன் மகளும் கீழே சென்றனர்.. ஒரு கார் மேல் பகுதி நசுங்கி..கண்ணாடி உடைந்து கிடந்தது...
பக்கத்தில் ரத்த வெள்ளத்தில் ஒரு ஆணின் சடலம்..கிடந்தது...

எல்லாரும் பரபரப்பாக பேசி கொண்டு இருந்தனர்..சார் அந்த பொண்ணு பிளாட் தான் சார்..இந்த பையன் அந்த பொண்ணு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான்..பிளாட்க்கு போனாங்க..நான் பாத்தேன் சார்..என்றான் வாட்ச்மேன்..பிறகு போலீஸ் வந்து ஒரு மணி நேரத்திற்குள்
அவளை கைது செய்து அழைத்து சென்றது...

அவள் கண்கள் கலங்கியது..பாப்பம்மா அவளை பார்த்து கண்ணீர் சிந்தினாள்..
போய் அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தாள்.. மகள் போக விடவில்லை...

சிறுது நேரம் கழித்து.. போலீஸ் வாகனம் புறப்பட்டது...அனைவரும் குழுவாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.." சார்..ஒரு வழியாய் இந்த பீட நம்ம அப்பார்ட்மெண்ட் ஆஹ் விட்டு ஒழிஞ்சது.."என்றும் சிலர், சார் இனிமே இந்த மாதிரி ஆளுங்கள லாம் பிளாட்டுல விடாந்திங்க என்றும் பேசி கொண்டு இருந்தது பாப்பமாவின் காதில் விழுந்தது.. மகள்... வாம்மா போவோம் காலைல ஆபிஸ் போகணும்...என்றாள்...

எல்லோரும் அவளை பற்றி ஒன்று இட்டுக்கட்டி கொண்டு இருந்தனர்...ஆனால், அவள் யார் என்று பாப்பம்மா ஒருவளுக்கு தான் தெரியும்...

"கண்களில் கண்ணீருடன் தன் பிளாட் நோக்கி சென்றாள்....பாப்பம்மா....

-முகம்மது முஃபாரிஸ்.மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (7-Mar-18, 1:04 pm)
பார்வை : 347

மேலே