கடவுள் கணக்கு

ஒரு பயணியர் விடுதி, இரவு நேரம்,
இரண்டு வழிப்போக்கர்கள் தங்கியிருந்தனர்,. மூன்றாவது நபர் ஒருவர் வந்து இணைந்தார்.
முதல் இருவரும் சாப்பிட தயார் ஆகினர். அப்போது மூன்றாமவர்,
எனக்கும் ஏதாவது சாப்பிட கிடைக்குமா?என வினவினார்.
அதற்கு, முதலாமவர் இங்கு எதுவும் கிடையாது, என்னிடம் ஐந்து ரொட்டி துண்டுகள் உள்ளது என்றார், இரண்டாமவர், என்னிடம் மூன்று ரொட்டி துண்டுகள் உள்ளது, இதை மூவரும் சமமாக பங்கிட்டு சாப்பிடுவது எப்படி என்றார். அதற்கு
மூன்றாமவர், எட்டு ரொட்டியை மூன்று மூன்று துண்டுகளாக வெட்ட
24துண்டுகள் வரும், ஆளுக்கு8ஆக
சாப்பிட்டு விடலாம் என, அவ்வாறே பிரித்து உண்டு பசியாறி உறங்கினர்.
காலை எழுந்து போகும் போது மூன்றாமவர்8 தங்க நாணயங்கள் கொடுத்து இருவரும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு விடை பெற்றார்.
இரண்டாமவர் ஆளுக்கு 4 என்று பிரிக்க, முதல் நபர் ஒப்பவில்லை,
5 ரொட்டி நான் கொடுத்ததால் எனக்கு5 உமக்கு 3 என்றார். ஆனால்
இரண்டாமவர், அதிகம் வைத்தவர்
கொடுப்பது இயல்பு, குறைவாக இருந்த போதிலும் கொடுக்க மனம் கொண்டது நான் தான், பரவாயில்லை பாதி பாதி வைத்துக் கொள்ளலாம் என்றார்.
ஒப்புகை ஏற்படாமல் அரசனிடம் சென்றனர். அரசரும் சிந்தித்து பார்க்க முடிவு கிடைக்கவில்லை.
நாளை தீர்ப்பு என்று சொல்லி உறங்க சென்றார். அரசருக்கு கனவில் கடவுள் தீர்ப்பு ஒன்று வழங்கினார். மறுநாள் காலை சபை கூடியதும் அரசர்,5ரொட்டி தந்தவருக்கு 7 ம்,3ரொட்டி தந்தவர்க்கு
ஒரு தங்க காசும் கொடுத்தார்,
புரியாது தவித்தனர் சபையினர்.
அரசர் விளக்கினார்.
3 ரொட்டி கொடுத்தவர் போட்டது 9
துண்டுகள், அதில் அவருக்கு வநதது
8 துண்டுகள் ஆக அவர் கொடுத்தது
ஒரு ரொட்டி துண்டு மட்டுமே,5ரொட்டி தந்தவர் 15 ல்7துண்டுகள், ஆகவே
7:1 இதுதான் தீர்ப்பு என்று கூறினார்.
நாம் ஒரு கணக்கு போட்டு வைத்தால்
கடவுள் ஒரு சரியான நேர்மையான தீர்ப்பு வைத்திருப்பார்.
சரிதானேஃ
ஆக பேராசை படாதீர்கள்.

எழுதியவர் : பாலமுருகன்பாபு (7-Mar-18, 8:03 am)
Tanglish : kadavul kanakku
பார்வை : 212

மேலே