ஏங்கல்ஸின் காதல்

ஊரே உறங்கும் அந்த நடு நிசியில்,யாரும் இல்லாத அந்த தெருவில் நான் மட்டும் பட படக்கும் இதயத்துடன் இருட்டில் பதுங்கி இருந்தேன்,என் பெயர் ஏங்கல்ஸ்,இன்று எப்படியாவது அம்பிகாவை அடைந்து விட வேண்டும் ,நினைக்கும் போது நெஞ்சு சில்லிட்டது

அம்பிகா அப்படி ஒன்றும் அழகில்லைதான் ஆனால் பாழாய் போன என் மனதுக்கு அவளை அப்படி பிடித்திருந்தது ,அம்பிகா என் வீட்டுக்கு எதிர் வீட்டு பெண் ,நான் என் வீட்டுக்கு ஒத்த பய ,காசு பணத்துக்கு குறை இல்ல ,பருவ வயசு ,காதல் வந்து தொலைஞ்சுது அவமேல ,நாலு வருஷம் ,நாலு வருஷம் காதல் வளர்த்தேன் அந்த காதலாலேயே பிளஸ் டூ ல பெயிலா போனேன் கொஞ்ச நாளைக்கு முன்னால அவளை கோவிலில் வைத்து மடக்கினேன்

" அம்பிகா நில்லு "
" என்ன ? "
" ஐ லவ் யு "
" என்ன ! "
" உன்ன காதலிக்கிறேன் நீ இல்லாம வாழ முடியாது "
" தோ பார் ஏங்கல்ஸ் என்னை எங்கப்பா ஒரு இன்ஜினியருக்கு தான் கல்யாணம் பண்ணப்போறதா சொல்லறாரு நீயோ பிளஸ் டூ வே கோட்டு அடிச்சுட்டே இது சரி படாது என்னை மறந்துடு "

சொல்லி விட்டு விருட்டென போய் விட்டாள் , விடுவனா நான் யாரு மூளையை கசக்கினேன்
ஐ வானட் எ பிளான் ,அவ எனக்கு வேணும் அவளவுதான் ,அப்போது சன் டிவி நாடகத்தில் ஒரு வசனம் என்னை தட்டியது

" டேய் அவளை கெடுத்துடு ,உனக்கே கட்டி வெச்சுடுவாங்க "
" மாட்டிக்கிட்டா ? "
" மரத்துல கட்டி வெச்சு அடிப்பாங்க "

மாட்ட மாட்டேன், அம்பிகா எனக்குதான் அதுக்குதான் இதோ பதுங்கி இருக்கேன் அவளோட குடும்பம் ஊர் திருவிழாவுக்கு போய்விட இவமட்டும் போகல அது ஏன்னு தெரியல இப்ப அவமட்டும் வீட்ல தனியா ,ஊரு சனம் தூங்கிடுச்சு ,ஊத காத்தும் அடிச்சிடுச்சி ,நீண்ட நேரமாய் யோசித்து காத்திருந்தேன் அதோ அந்த விளக்கொளியில் தெரியிற காம்பவுண்ட் சுவரை தாண்டி குதிச்சி உள்ளே போயி ,கதவை மெல்ல தட்டி ,திறக்கும் அவளை வாயை பொத்தி,எனக்குள்ளே ஆரம்ப கால சத்திய ராஜை கொண்டுவந்து வில்லனாக மாறினேன் ,மெல்ல எழுந்து நடந்து சாலை குறுக்கே சட்டென கடந்து காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்தேன் அவள் வீட்டு ஜன்னல் ஒளியில் இரண்டு பெண் உருவங்கள் தெரிய தவழ்ந்து அருகே சென்றேன் உள்ளே அம்பிகாவும் அவள் தோழி வனிதாவும் பேசி கொண்டது,,,,,,

" அப்போ நீ ஏங்கல்ஸ்ச லவ் பண்ற அப்படித்தானே ? " - வனிதா
" ஆமாம்டி அவனை நான் மொத மொதலா பார்த்த தினத்துல இருந்து காதலிக்கிறேன் ,அவனை பார்க்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது அதனாலதான் திருவிழாவுக்குகூட நான் போகல " - அம்பிகா
" அப்ப அவன் கிட்ட ஏன் லவ் மறைச்ச ? " - வனிதா
" அவன் நல்ல நிலைக்கு வரணும் அதனாலதான் ,இனிமே எனக்காக அவன் படிப்பன் "
" சூப்பர் டி "

எனக்குள் இருந்த கேடு கெட்ட பாலியல் பலாத்காரன் எரிந்து கருகி சாம்பலாகி காற்றில் பறக்க,நான் ஓடி காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்தேன் ,விடிய துவங்கியது .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு ) (6-Mar-18, 5:50 pm)
பார்வை : 268

மேலே