ரவுடி
தன வாழ்வின் கடைசி நாட்களில் நடந்து கொண்டிருந்தான் ஏங்கல்ஸ் ,இன்றோ அல்லது இந்தவாரத்திலோ அவன் மரணிக்க கூடும் ,யாரும் வாழாத அப்படி ஒரு ராஜவாழ்க்கை அவன் வாழ்ந்திருக்கிறான் இன்றுவரை சென்னையை கலக்கி கொண்டிருக்கும் ரவுடி ,போலீசின் சிம்ம சொப்பனம் ,இந்திய ராணுவமே அவனை பிடிக்க முயன்றாலும் தோற்கத்தான் வேண்டும்,ஏங்கல்சும் மதிக்கும் தன நிகர் ரவுடி எமில்ஜாய்ரமேஷ் மட்டுமே ,கடந்த வருடத்தில் ஒருநாள் ஏங்கல்ஸின் எதிப்பை சமாளிக்க முடியாமல் தன சொந்த பூமி கேரளம் ஓடிப்போனான் ரமேஷ் ,அந்த ரமேஷ் தான்
ஏங்கல்ஸின் கடைசி அத்தியாயத்தை எழுதி முடிக்கப் போகிறான்
குமுளி தாண்டி சபரிமலை போகும் காட்டு பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷை தேடி கண்டுபிடித்தான் கணேசன்,கணேசன் ஏங்கல்ஸின் வலது கரம்
" ஏங்கல்ஸை முடிச்சுடனும் ரமேஷ் "
சொன்ன கணேசனை உற்று பார்த்தான் ரமேஷ்
" என்னை போட்டு தள்ள ஏதாவது பிளானா ? "
" சே சே அப்படி இல்ல ரமேஷ், என்னாலதான் ஏங்கல்ஸ் இந்த அளவு வளந்தான் ,துரோகி
எல்லாம் தெரிஞ்ச என்னை ஒழிச்சுட நினைக்கிறான் பாவி, அதான் நான் முந்திக்க நினைக்கிறன் "
" கூடவே இருக்குற நீயே அத பண்ணிடலாமே என்னை தேடி வந்த ரீசன் ? "
" ஏங்கல்ஸை சுத்தி ஒரு கூட்டம் இருக்கு அவனுக்கு பின்னால எத்தனையோ ரவுடிகள் எல்லாரையும் வழி நடத்த அடக்கி ஆள நீ தான் சரி ,ஏங்கல்ஸை போட்டுட்டு சிம்மாசனத்துல நீ உட்கார் நான் சாமரம் வீசுறன்,அவங்க நம்புவாங்க "
சற்று நேரம் யோசித்தான் ரமேஷ்
" உன் யோசிப்பு சரிதான் என்னை நம்ப மறுக்குற என் அறையில சி சி டி வி இருக்குற விஷயம் ஏங்கல்சுக்கு தெரியாது கடந்த வாரம் ஒருநாள் நைட் நான் தூங்கும் போது ஏங்கல்ஸ் என்னை கொல்ல வந்துட்டு கொல்லாம போற காட்சி அதுல பதிவாகி இருக்கு ,அந்த புலி எப்பவேணாலும் எம் மேல பாயும் ,அதுக்குள்ளே நான் அத கொண்டுடனும் "
என்றபடி தன் ஸ்மார்ட் போனின் வீடியோவை ராமேசுக்கு காட்டினான் கணேசன்
" நம்பறேன்,நான் அடுத்தவாரம் சென்னை வரேன் ஹெட்ச் போட்டுடு "
கணேசன் ஏங்கல்ஸ் முன் நின்றான் ,ஏங்கல்ஸின் கண்கள் பலநாட்கள் தூங்காததில் சிவந்து கிடந்தது
" என்னோட டெத் டே எப்போ மாமா ? "
கலங்கிய கண்களை துடைத்தபடி " வர பதினேழாம் தேதி " குலுங்கினான் கணேசன்
" ஏன் மாமா அழறே எத்தனை பேரை இந்த கையால் கொன்னிருப்பேன் ,இப்ப என்னை அவன் கொல்லப்போறான் அவளவுதான் ,கடவுள் இருக்கான் மாமா ,அடாத ஆட்டம் ஆடுன என்னை தீராத நோயை கொடுத்து அடக்குனான் பாரு அவன் கிரேட்டு மாமா "
" அதுக்காக நீயே சாகனுமா ? " - கணேசன்
" சிங்கம் எளசா சித்தெறும்பும் கடிச்சி பாக்கும் ,மீசையை முறுக்கிக்கிட்டு இருக்கும் போதே கத முடியனும் அதான் கெத்து "
" அதுக்காக அவன் கையாள ஏன் சாகனும் "
" எதிரிதான் ஆனா சரியான வீரன் அவன் ,என்னை கொல்ல ஒரு தகுதி வேணாம் அதான் அவனை
வரவழைச்சன்,எனக்கு அப்புறம் என்னை நம்பி இந்த தொழிலுக்கு வந்த மக்களை காப்பாத்த ஒரு நல்ல தலைவன் அவன், மாமா என்னை நம்புனவங்களோட நல்வாழ்வுக்கு பங்கம் பன்னிட்டு போக
நான் என்ன அஞ்சு வருஷம் மட்டும் ஆட்சி பண்ற பணத்தடிமையா ? ரவுடி மாமா ரவுடி "
சொல்லி விட்டு இருட்டறையை நோக்கி நடந்தான் ஏங்கல்ஸ் ஒளிர்ந்தது .