விழித்தெழு பெண்ணே

விழித்தெழு பெண்ணே
விடியல் உனது
கரங்களைத் தூக்கு
அறங்களை அறிவாய் ஆக்கு
அகதியாய் இருக்காதே
அடிமையாக நாட்களைக் கழிக்காதே
உரிமை உனது
கண்களில் கடிவாளம் கட்டிச் சொல்லாதே
கடல் போல் நீ
கரைபுரண்டு செல்
களிகாலம் என்றாலும்
இக்காலம் உனது
விழித்தெழு பெண்ணே
உன் வியர்வைத் துளியும் விதி வகுக்கும்
உன் பெயர் பொரிக்கும் .....
விழித்தெழு பெண்ணே
விடியல் உனது
கரங்களைத் தூக்கு
அறங்களை அறிவாய் ஆக்கு .....
ஒரு போதும் உறங்கி விடாதே
உலகமே உன்னை வீழ்த்தும்
போராட்டம் செய்
நீ வீழும் வரை அல்ல
உன் போராட்டம் வாழும் வரை
விழித்தெழு பெண்ணே விழித்தெழு பெண்ணே....