பெண், பெண்மை , பெண்ணுரிமை
பெண்ணே , நான் பெண்மைக்கு
என்றும் தலை வணங்குபவன்
ஏன் என்றால் பெற்ற தாய் பெண்
தாய், பெற்ற தாய் அவள் என் தெய்வம்
இவ்வுலகில் நடமாடும் தெய்வம்
ஒவ்வோர் தாயும்
கோவிலில் உனக்கு சிலை வைத்து
சக்தியாய், இலக்குமியாய், கலைமகளாய்
பூஜிக்கும் மக்கள் உயிரோடு நிலவுலகில்
உலாவிவரும் உனக்கு சம உரிமைக் கூட
தர மறுப்பதேனோ ............கபடம் அல்லவா இது
அழகானப் பெண் என்று பெண்ணின்
அழகைப் பார்த்து ரசிப்பதில் தவறேதும் இல்லை
மலர்களை பார்த்து நாம் ரசிக்கின்றோம்
மலரை அழிப்பதில்லையே ஒரு போதும் நாம்,
ஆனால் சொன்னால் வெட்கக்கேடு, நம்மில்
சில வீணர்கள், , ஈனர்கள் பெண்களை காப்போம்
என்பதை அடியோடு மறந்து அவர்களை
வெறும் 'பாலியல் பொம்மைகள்போல்' நினைத்து
பெண்ணின் உயர் ஆபரணம் 'கற்பினை'
சூறையாடுவதேனோ?....
பெண்ணே உன்னை வணங்குகிறேன்
பெண்ணினத்தை காப்பது என்பதோர் கடமை
ஆணிணினத்திற்கு இறைவன் தந்த கடமை
பெற்ற தாயை காப்பது கடமை அல்லவா
ஒவ்வோர் ஆண்மகனுக்கும்., அதுபோல ...................
பெண்ணே நீ ஆணிற்கு ஒரு போதும்
குறைவானவள் அல்ல என்று
நிரூபித்தபோதிலும் ,உனக்கு
சம உரிமை வழங்க ஆண்கள்
மறுப்பதேனோ ... சிறுமை.. சிறுமை
படிப்பில், விளையாட்டில்,நடிப்பில்
என்று ஒவ்வோர் பிரிவில் பெண்
ஆணுக்கு நிகர்தான் என்று நிரூபித்து
வருடங்கள் ஓடியபின்னும் , பெண்ணை
கூண்டு கிளிபோல் நடத்தும் ஆண்...
ஆணினத்திற்கு இது ஓர் 'தலைகுனிவு'
பெண்ணே, அஞ்சாதே, நிமிர்ந்து நில்
உன் பாதையில் தர்மம் இருக்கின்றது
அது வெற்றிப்பாதையாய் மாறும்
ஒரு நாள் வெகு விரைவில்
பெண்ணிற்கு ஓட்டுரிமை தராத
சில நாடுகள் கூட இன்று ஓட்டுரிமை
தந்து விட்டதே ...இது உந்தன் கூக்குரலுக்கு
ஓர் விடைதானோ.....
பெண்ணே முழு உரிமைக்கு நீ
அஞ்சாது முன்னின்று போராடு
முடிவில் வெற்றி உனக்குதான்
பெண்கள் தினத்தில் பெண்ணே
உன்னைக் கண்டு வியக்கும் நான்
கடவுளில் அழகன் முருகன் என்றால்
மண்ணில் பெண்ணே நீதான் 'அழகு'
'அழகே' பெண் , உன்னை நான்
வணங்குகிறேன், போற்றுகின்றேன்
பிள்ளைப்பெற்று தரும் தாயல்லவோ நீ
தாயே நீ வாழி, நீடூழி வாழி