யானும் தீயவன்

யானும் தீயவன் தான்.
எங்கோ
யாருக்கோ குரல் கொடுக்க நினைக்கும் ஒரிருவரில் நானும் ஒருவன்.
எண்ணிய எண்ணமெல்லாம்
எங்கேயோ செத்து மடிய
இன்னமும் இன்னலுடன்
இங்கே தான் இருக்கிறேன்.
கண்களில் கண்ணீருடன்
படுக்கைக்குள் தான்
பத்திரமாய் பூட்டி கிடக்கிறேன்.
பாரும் எங்கள் ஊரை
பாலாய் போன பணத்திற்கு பேயாய் துரத்தி
தாயும், சேயும் கொன்று போன கதை கேளேன்.
இந்த கேடு கெட்ட தேசத்தில் பாடுபட்டு பிறக்காமல் கரு கலைத்த கதைதானிது
அரசு அக்கறையிலும்,
அதன் பணி அர்பணிப்பிலும் நடந்த நிலையன்று இன்று.
சூடு சுரனையற்று
சுகமாய் நீ திரிய,
காடு மலை கடந்து
கானல், மழை திரிந்து
நான் ஈட்ட
நீ கை நீட்ட
என் கை நீள தான் செய்யும்
உன் கண்ணம் சிவக்க
இனி வரும் காலங்களில்
நீ நினைத்து வாழ
மறக்காத ஒன்றை
மகிழ்ச்சியாய் நான் தருவேன்.
நிலை கெட்ட மனிதர் முன்னே யானும் தீயவன் தான்

எழுதியவர் : venkatesh km (8-Mar-18, 12:12 am)
பார்வை : 136

மேலே