பெண் பிறந்தது முதல்

பிறந்தவுடன் பெற்றோரின் பெருமைக்குரியவளாய்
தத்தி நடக்கும் வயதில்
தாய் தந்தையின் அன்பிற்க்குரியவளாய் ...
மழலையின் வார்த்தையில் சந்தோசம்
தருபவளாய்...

பள்ளி சேர்க்கும் வயதிலே
தந்தையை கட்டிக்கொண்டு
அழுது கண்கலங்க வைப்பவளாய்...
பருவ வயதினிலே
நாணம் கொண்டவளாய்...

திருமணத்திலே திருமதி ஆகி
குடும்பம் பிரிந்து புதிய
குடும்பத்தில் விளக்கேற்றுபவளாய்..
அன்று முதல் புதிய
உறவுகளை கண்டுகொண்டவளாய்..

உதிரம் கொடுத்து இன்னொரு
உயிரை ஈன்றெடுக்கும் போது
முழுமையானவளாய் ..

மனைவியாய்
தாயாய்
சகோதரியாய்
மாமியார் முறையாய்
அண்ணி உறவாய்
தோழியாய் துயரம் கண்டு
துயர் துடைப்பவளாய்
இன்னும் எத்தனையோ.....!!!!!!

வார்த்தைகள் போதவில்லையடி பெண்ணே...!!!
உன்னை வர்ணிக்க...!!!
மகளிர் தின வாழ்த்துக்கள் ...

எழுதியவர் : இலக்கியா (8-Mar-18, 9:32 am)
சேர்த்தது : இலக்கியா
பார்வை : 78

மேலே