மஃனா கார்டா
ஆக எனக்கு
அடிமைகள் வாய்த்தனர்.
அன்பும் பண்புமாய்
பேசிப்பேசி சிக்கிய
சிறு கும்பல்தான்...
பெருகும் போகப்போக...
குட்ட வேண்டிய நேரம்
தடவிகொடுத்தால்...
தண்டிக்கும் காலத்தில்
ஷொட்டு வழித்தால்...
சிக்கும் நமக்கு உரிய
சின்ன அடிமைகள்...
எந்த உளறலுக்கும்
அடிமை கைதட்டி சிரிக்கும்
பிகில் அடித்து குதிக்கும்
வார்ப்பு அப்படி....
அடிமைகள் வாசிக்காது.
வாசித்தாலும் புரியாது...
சொல்லில் வான் வளைக்கும்,
மெழுகாய் உருகி
நெய்யாய் குழையும்.
தலைதடவித் தருகையில்...
கவனம் நண்பரே
அடிமைகளுக்கு
வெறி பெருகும்
நேரமும் உண்டு.
எச்சில் வடிய பகல்கனவில்
அடிமைகள் தத்தளிக்கும்
அப்போது கவனம்...
அடிமைகள் கனவை
பாராட்டிவிட்டால்
உமக்கும் சிக்கும்
சில நூறு அடிமைகள்.